பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 முருகவேள் திருமுறை (2 திருமுறை குமுதபதி வகிரமுது சிந்தச் சிந்தச் சரணபரி புரசுருதி கொஞ்சக் கொஞ்சக் குடிலசடை பவுரிகொடு தொங்கப் பங்கிற் கொடியாடக் குல தடினி அசையஇசை பொங்கப் பொங்கக் கழலதிர டெகுடெகுட டெங்கட் டெங்கத் தொகுகுகுகு தொகுகுகுகு தொங்கத் தொங்கத் தொகுதிதோ திமிதமென முழவொலிமு ழங்கச் செங்கைத் தமருகம ததிர் சதியொ டன்பர்க் கின்பத் திறமுதவு பரதகுரு வந்திக் குஞ்சற் குருநாதா திரளுமணி தரளமுயர் தெங்கிற் றங்கிப் புரள எறி திரைமகர சங்கத் துங்கத் திமிரசல நிதிதழுவு செந்திற் கந்தப் பெருமாளே ! (2) 18. திருவடி பெற கொடியனைய இடைது.வள அங்கமும் பொங்கஅங் குமுதஅமு திதழ்பருகி யின்புறுஞ் சங்கைய்ன் குலவியனை முகிலளக முஞ்சரிந் தன்பினின் பன்ைபுலாவக் கொடியவிரல் நகநுதியில் புண்படுஞ் சஞ்சலன் குணகியவ ருடனினிது சம்ப்ரமங் கொண்டுளங் குரலழிய அவசமுறு குங்குணன் கொங்கவிழ்ந் தொன்றுபாய்மேல் 1. தடினி - ஆறு, குல தடினி - சிரேஷ்டமான கங்கை யாறு. 2. திமிதம் - பேரொலி.