பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/654

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருத்தணிகை திருப்புகழ் உரை 181 இசைத்தமிழ், நாடகத்தமிழ், (அகப்பொருள்) துறைப் பாக்கள் என்னும் வகையில் விருப்பத்துடன் இலக்கணம் பொருந்திய இல்க்கியத்தின் பாற்படும் (ஆக், மதுரம், சித்திரம், த்தாரம் என்ப்படும்) நால்வகைக் கவிகளையும் உள்ளத்தில், தரிப்பவர்கள், உரைப்பவர்கள், நினைப்பவர்கள் (ஆகிய அடியார்களை) (நான்) மிகவும் இவ்வுலகில் சொல்லிப் போற்றுதல் அறியாமலே (அவர்களைப் புகழாமல்) கொங்கையாலும், முகத்தாலும், மனத்தில் ಅದ್ದಿ ம் சாமர்த்தியம் வாய்ந்த பொதுமக்ளிருடைய மோக மயக்கினில் நான் விழலாமோ (விழக்கூட்ாது என்றபடி) (தனது) கரும்பு வில்லை வளைத்து (அதில்) அழகிய மலர்ப் பர்ணங்களைத் தொடுத்துப் பொருந்திய செருக்குடன், ஒளித் திருந்து செலுத்தின வலின்ம கொண்ட்மன்மதன்ன மனத்தினில் நினைத்த மாத்திரையில் அவன் தீயில் வேகும் படித் தமது நெற்றியில் உள்ள நெருப்புக் கண்ணால் எரித்தவரும், கயிலாய மலையில் வீற்றிருப்பவரும், இமய மலையில் வளர்ந்த உமாதேவிக்கு ஒரு புற்த்தை இடப்புறத்தை)த் தந்தவருமாகிய சிவபிரான் தந்த குழந்தையே! மேகங்கள் தங்கும் பொழில்களும் வயல்களும் உள்ள ஊராகிய இனிமை வாய்ந்த திருத்தணி மலையில் விருப்பங் கொள்ளும் பெருமாளே! (சமர்த்திகள் மயக்கினில் விழலாமோ) 272 உடலுள்ளும், அந்த உடலில் போய் மீண்டு வருகின்ற உயிரினுள்ளும், அழிவிலாத உணர்ச்சியுள்ளும், ஆகாயத் துள்ளும், முற்றின தீயினுள்ளும் 'வயற்பதி யினிற் பொருள் பிரியத்தொடு புலப்பட எனக்கருள் பெருமாளே." - வயற்பதி - வயலூர். SSதணிகை மலையில் முருகன் விருப்புறுதல் - 268 பாடற் குறிப்பைப் பார்க்க.