பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 முருகவேள் திருமுறை (2- திருமுறை நகையால்மத னுருவந் தீத்த சிவனாரருள் சுதனென் றார்க்கு நலனேயரு ளமர் செந்துார்க்கு ளுறைவோனே. நவமாமணி வடமும் பூத்த தனமாதெனு மிபமின் சேர்க்கை நழுவாவகை பிரியங் காட்டு முருகோனே, அகமேவிய நிருதன் போர்க்கு வரவேசமர் புரியுந் தோற்ற மறியாமலு மபயங் காட்டி முறைகூறி. அயிராவத முதுகின் தோற்றி யடையாமென இனிதன் பேத்து மமரேசனை முழுதுங் காத்த பெருமாளே (75) 91. பொது மகளிர் உறவு அற முலைமு கந்தி மிர்ந்த கலவை யுந்து லங்கு முறுவ லுஞ்சி வந்த கனிவாயும். முருக விழ்ந்து திர்ந்த மலர்க ளுஞ்ச ரிந்த முகிலு மின்ப சிங்கி விழிவேலும், சிலைமு கங்க லந்த திலத முங்கு எளிர்ந்த திருமு கந்த தும்பு குறுவேர்வும். தெரிய வந்து நின்ற மகளிர் பின்சு ழன்று செயல ழிந்து ழன்று திரிவேனோ, * மலைமு கஞ்சு மந்த புலவர் செஞ்சொல் கொண்டு வழிதி றந்த செங்கை வடிவேலா. 1. இன்ப சிங்க விழி - இருநோக்கிவளுண்கண்" - திருக்குறள் 1091. 2. சிலை வில்போன்ற நெற்றி - முகம் - இடம் 3. மலை முகம் சுமந்த புலவர் - மலைக்குகையில் அடைக்கப்பட்ட நக்கீரர். செஞ்சொல் (அவரால் துதிக்கப்பட்ட) திருமுருகாற்றுப்படை இவ்வரலாறு பின்வருமாறு: சிவபிரானையே பாடி முருகனைப் பாடாதிருந்தார் நக்கீரர் என்னும் சங்கத் தலைமைத் தமிழ்ப் புலவர். இவர் திருப்பரங்குன்றத்திற் பொய்கைக்

  • .. தொடர்ச்சி பக்கம் 214