பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/844

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - சிராப்பள்ளி திருப்புகழ் உரை 371 இருட்டு இல்லாத தேவலோகத்தில் (விண்ணுலகில்) விளங்கி நிற்கும் ஆயிரங்கண்களை உட்ையவனாம் (தேவேந்திர அடைய) துன்பம் நீங்க அவனுக்குப் பாதுகாப்பைத் தந்தளித்த முருகனே! பன்னிருகரத்தனே! குகனே! வீரனே! லட்சுமீகரம் விளங்கும் ஈசுரனே! பசுபதியாம் சிவனுக்குக் குருமூர்த்தியே! சகல ராச்சியங்களுக்கும் அரசே! புகழும், வெற்றியும் பொருந்திய இலக்கர் ஆதியோர் உள்ள சேனைக் கூட்டத்தின் மேலே பறந்துலவும் (ப்ட்சிராசனாகிய) கருடன் மகிழ்ச்சி மிக அடைய. திருட்டுக் குணத்தராம் ராட்சதர்கள் அடிபட்டுச் சிதறுண்ணும்படி (திருக்கரத்தில்) எடுத்த வேலாயுதத்தைக் கொண்டு, (நம் பெண் வள்ளியைக் களவாடினான் இவன் என்று) கடுமையுடன் முடுகிவந்த அகங்காரம் கொண்ட வேடர்கள் திறையிடும்படியும் (வணங்கும்படியும்), முறையிடும் படியும் (தாங்கள் கற்பியலில் வள்ளியைத் திருமணம் செய்து திருவருள் புரிய வேண்டும் GTGUT முறை யிட்டுக் கொள்ளும்படியும்) செய்த மயிலேறும் போர்வீரனே! (என்) நிதியே! சரவணபவனே! சிவந்த ஒளியுள்ள கிரணங்களை உடெய சூரியனும், பணியனைய குளிர்ந்த கிரணங்களை உடைய சந்திரனும் வலம் வருகின்ற திருச்சிராப்பள்ளி மலைமீது நில்ைபெற்று விள்ங்கும் பெருமாளே! (உனது வார்கழல் கனவிலும் நனவிலும் மறவேனே) (முன் பக்கத் தொடர்ச்சி) தந்த புராணமும் தணிகைப் புராணமும் சேவலின் ஆர்ப்பால் வேடர்கள் மாண்டு வீழ்ந்தார் எனக் கூறும்; வேல் கொண்டு வேட்ர்களை மடிவித்தார் என்பர் அருணகிரியார். வேட்டுவர் கோகோ கோ என மடிய நீட்டிய கூர் வேலாயுத" - திருப்புகழ் 341. வேற்கொடு. வேட்டுவர் திறையிட முறையிட மயிலேறும் பராக்ரம' திருப்புகழ் 344 ■ "சோரனென நாடிவரு வார்கள் வன வேடர் விழ சோதி கதிர் வேலுருவு மயில் வீரா" - திருப்புகழ் 846, " போர் வேடர் கோ என, இணையும் அங்குறப் பாவாய்! வியாகுலம் விடுவிடென்று கைக் கூர் வேலை ஏவிய இளையோனே . திருப்புகழ் 940.