பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/640

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருத்தணிகை திருப்புகழ் உரை 167 செழிப்புள்ள உத்தம குணத்தரான சிவனடியார்களும், தவமுநிவர் கூட்டத்தினரும், தேன் நிறைந்த மலர் கொண்டு பணிகின்ற திருத்தணிப் பதியில் வீற்றிருக்கும் பெருமாளே! குறமகள் (வள்ளியின்) பெருமாளே! (மலர்ப் பதத்தினில் உருகவும் இனியருள் புரிவாயே) 267 தொட்டால் (கூச்சப்பட்டவர் போல) அசைபவர்கள், வஞ்சக நினைவு கொண்டவர்கள், (அறிவுக்)கண் இல்லாத மூடர்கள், குமரிகள் (இள மகளிர்கள்), நிலப் பிளப்பு அனையவர் (பிளப்பில் ஆபத்தில் வீழ்த்துபவர்கள்), இன்பச் சுவையைச் சிறுகச் செய்பவர்கள் (இன்பத்தைக் குறுக்குபவர்), தந்திர வாதிகள், பிணக்கம் கொள்பவர்கள், முழு மோசம், அடைக்கப்பட்டுள்ள பயனிலிகள், மூடர்கள், குற்றம் உள்ளவர்கள், தும் மாறுபட்ட பேச்சுக்காரிகள், பிடிகொடாது நழுவுகிறவர்கள், (தங்கள் சூது வெளியாகாமல்) மழுப்பு வோர்கள், (பொருள்) அறுக்கின்ற நண்பர்கள், விலைக்குக் கொங்கையை (விற்பவர்கள்) ஆகிய பொது மகளிரின் வலையில் (நான்) புகாமல், (நற்கதிக்கு போகும் வழியை) அடைத்த அந்தப் பொது மகளிர்களுக்குச் சமானமாக நடக்கின்ற (அவர்கள் போன்ற). விருப்பை (இன்பத்தைக்) காட்டுபவர்களும் வெறுப்பை (துன்பத்தை ஊட்டுவர்களும்) ஆகிய சித்துக்களைக் காட்டும் கருமயோகிகளை, அணிந்துள்ள் பவளத்தின் ஒளி போலப் (பெரிதும் மதித்து), அவர்களை வரும்படி வரவழைத்து, சக்ரவாள கிரியாற் சூழப்பட்ட இப்பூமியில் அவர்களுடன் விளையாடி (வீண்பொழுது போக்கும் என்னுடைய). ஆதலால், அவர்களுடன் கூடி விளையாடும் இணக்கம் விலக்கத்தக்கது என்றபடி கருமயோக சித்துக்களை அருணகிரியார் கண்டிப்பதைச் சித்து வகுப்பிலும், "கவலைபடுகின்ற யோக கற்பனை மருவு சிந்தை போய்விட" எனத் திருப்புகழ் (212) பாடலிலும் கூறியிருத்தல் காண்க