பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/886

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . விராலிமலை) திருப்புகழ் உரை 413 எதிர்த்து, வந்த அசுரர்களின் சேனை அச்சம் அடைந்து முடிவுற இந்திர லோகத்தில் தேவர்கள் குடியேற, நெருங்கி வ்ந்தி பூதங்களும், பிசாசுகளும் தத்தம் பசியர்ற, மகிட்ாசுரனைப் பகைத்தழித்த துர்க்கை விரம் வாய்ந்த காளி, பிடாரி முதலிய தேவதைகள் அர அர சங்கரா என்னும் ஒலியை எழுப்ப, மேருமலையின் உச்சி யளவும் நெருங்கும் தூள் கிள்ம்ப வேலைச் செலுத்தின வயலூரனே! - வெந்த திருநீற்றை அணிந்த சடையையுடைய இருடிகள் பந்தபாசம் ஆகின்ற (உலகக் கட்டு, உலக ஆசை ஆகின்ற) விகாரங்களை (கலக்கங்களை) அப்புறப்படுத்தின் வசீமழிய்ச் செய்த வென்றி யான (வெற்றி நில்ையான) ச்மாதி நிலையைத் திண்மை வாய்ந்த மலைக்குகையில் (அல்லது கற்குகையில்) கூடுகின்ற (விராலிமல்ையுறை பெருமாளே (அல்லது கூடுகின்ற மலையின்மேல்) மூங்கிலின்மேல் (அல்லது மலையின்மேல்) நின்று மயில் ஆட இனிப்புள்ள மதுவ்ை உண்டு கரிய வண்டுகள் பாட கொன்றை மரமான பொன்னை மிக வீசுகின்ற விராலிமலையில் வீற்றிருக்கின்ற பெருமாளே! (குருபர சம்ப்ரதாயமொடேயு நெறியது பெறுவேனோ) 358 கையும் நகக்குறி கொண்ட கழுத்தும், கலந்தெழுந்து சுருண்டு, வண்டு நெருங்கப் பெருமை வாய்ந்ததான கூந்தல் குலைந்து அலைய, அதிக பாரமானவையும். (முன் பக்கத் தொடர்ச்சி) "மயிலின் கணங்கள் நின்றாடக் கண முகில் முரசநின்றதிரத் தேனுலா வரி வண்டு இன்னிசை முரலும்" - - பெரிய திருமொழி 9-1-7. காந்தள் இரவலர் போற் கையேற்பக் கொன்றை கொடை வேந்தனெனப் பொன் சோரியும் வேங்கடமே" திருவேங்கட அந்தாதி, என வருவனவற்றில் காணலாம்.

இதழி - கொன்றை.