பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழகி திருப்புக ழ் உரை 255 107 கனத்துடன் (பாரமாய்) எழுந்து, மலைபோல உயர்ந்து, பச் சைக் கற்பூரம் முதலிய அணிந்து மரணத்தைத் தரவல்ல மந்திர வித்தை கொண்டது போலச் செழிப்புடன் வளரும் கொங்கைகளை உடைய மா தர்களின் - (கொவ்வைக்) கனிபோன்ற (செவ்) வாயை மகிழ்ந்து, (அவர்களை) விடா ـ2ك التي றுதி யாக அணைந்து, கைப்பொருள் எல்லாவற்றையும் இ ழந்துவிட்டுத் தளர்வடைந்து; மனம் தளர்ந்து, விக்கல் எழுந்து, அளவின்றி (உடல்) அழிவுற்றுச் சுக்கு போலாகி, என்வசம் அழிந்து (மயக்க அறிவு கொண்டு), மெலிவு தரும் நோயை (நான்) விலக்கி, (எனக்கு உள்ள) சேமநிதி (நீயே) என உணர்ந்து உன்னைப் புகழ மாட்டேனோ! தினைப்புனத்து வேடர் தந்த அழகிய குறமகளாம் (வள்ளி) இன்பங் கொள்ளும்படி அவளைச் சேர்வதற்குக் காதல் கொண்ட அந்தக் கிழவனே! (அந்தக் கிழவேடம் பூண்டவனே! அல்லது அந்த உரிமை கொண்டவனே) கடலேழும் மங்கிப்போக, மலையொடு (ஏழு கிரியோடு) சூரனுடைய தலைகள் பொடிபட வேலாயுதத்தைச் செலுத்திய பெருங் கோப வீரனே! நித்தமும் விரும்பத்தக்க குங்குமம் ஆதிய பூசப்பட்ட தோள் மணங் கொண்டவனே! ண்கிணிகள் மெல்லிய இசைகளைக் காட்டும் செவ்விய திருவடிகளை உடைய அருளாளனே (கிருபாகர மூர்த்தியே!) சிவலோகத்தில் உள்ள சங்கரிக்கு இறைவனாம் சிவனுடைய பிள்ளையே! பசிய நீர்நிலைகளையுடைய திருவாவினன். குடிப் பெருமாளே! (வைப்பெனவே நினைந்து உனைப் புகழ்வேனோ!)