பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 187 80 பரந்துள்ள இப்பூமியில் அளவுக்கு மிஞ்சி வஞ்சனையுள்ள லோபியர்களிடம் (பொருள் பெற வேண்டி அவர்களைச்) சிறப்புடன் சொல்லப்பட்ட சூரியமூர்த்தியே (நீங்கள்) என்று வியந்து உரைத்தும், குற்றம் இல்லாத பெரிய உயரிய நூல்களையும் கிடைத்துள்ள சங்கநூற் பாடல்களையும் - (வேறு) நூல்களையும், கதைகளையும், காப்பியங்களையும், அறுபத்துநான்கு கலை நூல்களையும், "திருவள்ளுவ தேவர் வாய்மை" எனப்படும் பழமொழி நூலையும் (திருக்குறளையும்) ஒதியும் உணர்ந்தும், பலவகையான சந்தமாலைச் செய்யுள்கள், மடல், பரணி, கோவை, கலம்பகம் முதலான கோடிக்கணக்கைக் கொண்ட பிரபந்த வகைகளைப் பாடியும், வகை வகையாக ஆசுப் பெருங்கவி, 'சண்டவாயு, ՛ւD துரகவி ராஜன்’ நான் என்று (ஆடம்பரமாகப் பட்டப்பெயர் களை வைத்துக்கொண்டும்), வெண்குடை, விருது (வெற்றிச் சின்னம்), கொடி, தாளம் , மேளம், பல்லக்கு முதலான சிறப்புச் சின்னங்களோடு உலவிவரும் ம்யக்க அறிவும், அக்ங்காரமும் தவிராவோ? (சலந்தராசுரனுடன்) வலிமையுடன் போர் செய்து பெரிய ஆரவாரம் உண்டாக, அவனுடன் எதிர் போர் செய்ய முடியாமல் "ஏகனே! சங்கர! ஹரஹர! சிவா! மஹா தேவா" என்று தியானித்த அன்று சேவித்துபூமியில் வெகு காலம் (தவஞ் செய்து) வணங்கி, உள்ளம் உருகி, கொடிய பாசக் கயிறு முதலிய ஆயுதத் தொகுதிகள், டாம்பிகம், மிக்க பலம் , கொடுமை இவையெலாம் உள்ள (அந்த) மஹா சலந்தராசுரன் வருந்தி வீழ, .