பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி) திருப்புகழ் உரை 419 காடுகள், மலைகள், தீவுகள், கடல்கள் இவையெலாம் பொடிபடவும், கலங்கவும், நீல நிறம் மிகுந்த அழகிய மயிலில் ஏறும் முருகனே! மன்மதனுடைய கைம் மலர்ப் பாணங்கள் வெட்கிக் குலைய, வேடுவப் பெண் (வள்ளியின்) படுக்கைச் சேர்க்கையைக் கண்ட எங்கள் பழநி மேவும் பெருமாளே. (மா விஞ்சை முதுகினேறி லோகங்கள் வலமதாட அருள்வாயே.) 180 (பக்தித்) திடமில்லாதவன், உத்தம குணமில்லாதவன், நல்ல திறமையில்லாதவன், அற்புதமான் செயல் ஒன்றுமில்லாதவன், உண்மைத் தவம் இல்லாதவன், திருந்திய செபம் செய்தல் இல்லாதவன். சொர்க்கத்திலும் இடமில்லாதவன். கையாற் கொடுத்தல் அறியாதவன், சொல் வன்மை இல்லாதவன் நல்ல தமிழைப் பாடுவதற்கு, (இத்தகைய குறைபாடுகளை உடைய நான் உனது) இரு பதங்களை அடைந்து, இருவினைகளும் அற்று, தகுதி யுள்ள நல்ல கதியைப் பெறவேணும்; கெட்ட புத்தியைக் கொண்டுள்ள அசுரர் கூட்டங்கள் இறந்து போம்படி போர்செய்த வேலனே! கிரணங்கள் (ஒளிகள்) குறைந்துள்ள இளம்பிறையையும். அறுகம்புல்லையும், எலும்புகளையும், (அல்லது ருத்ராகூ மாலையையும்), கொன்றை மலரையும், கொக்கின் இறகுடனே பரந்துள்ள சடையிற் புனைந்துள்ள நடனம் செய்கின்ற - பரம ருடைய ஒப்பற்ற பாலனே! பல வயல்களிலும் (அல்லது பலன் தரும் வயல்களில்) முத்து நிறைந்துள்ள பழநி மலைப் பெருமாளே! - (கதியைப் பெறவேணும்)