பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/522

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேரகம்) திருப்புகழ் உரை 49 தத்தன தனத்தன தனத்தன என்று பறைகள் ஒலிக்க, முரசு (ஒரு வகைப் பறை), துடி (உடுக்கை), இடக்கை (இடக்கையாற் கொட்டும் ஒரு தோற்கருவி), முழவுப் பறைகள் (தம்பட்டம் பறைகள்) இவைகள் சத்தம் அறைய பேரொலி செய்யவும்), கூட்டமாய் வருவதை ஒத்துச் செனித்து (தோன்றிரத்த வெள்ளம் நிரம்பி ஒட பாம்பு (ஆதிசேடன்) நெளிய, அசுரர் பிணங்கள் மிதப்ப தேவர்கள் தம் கைகளைத் தூக்கி "ஹர ஹர சிவ! பிழைத்தோம்" என்று முழங்க, சக்ரவாளகிரியின் சுவர்களும் அந்த கூடிணமே பிளவுபட வென்ற வேலனே! உனது திருவுள்ளத்தில் (நினைத்த மாத்திரையில்) எத்தனை உலகங்களைப் படைத்து உடனே அழித்து, (நடங்கொள்வேளே)! பிரமனது அழகிய குடுமியைப் பிடித்து உனது மலர் போன்ற அழகிய திருக்கரம் வருந்த பலமுறை (அவனைக்) குட்டி நடனம் கொண்ட வேளே! செட்டி வேடம் பூண்டு தினைப்புனத்தில் சிறிய குறப்பெண் வள்ளியின் படுக்கையில் மகிழ்ந்த செட்டியே! குருமலை (சுவாமி மலையில்) வீற்றிருக்கும் ஞானமயச் சிவபிரானுக்கு ஒப்பற்ற குருமூர்த்தி என்று முத்திநிலை பெற்ற பெரியோர் புகழ்கின்ற தம்பிரானே! ി (பிறப்பையும் இறப்பையும் எடுத்து உலகில் மங்குவேனோ) 216 சேல் மீன்,வேல் இவை போன்றதும், வாளாயுதத்தைத் தாக்கி வருத்த வல்லதுமான கடைக் கண்ணை உடைய மாதருடைய வசத்திற்பட்ட ஆளாகி