பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/542

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேரகம் திருப்புகழ் உரை 69 பிரிவு செய்யப்பட்ட ஒரு விழியைக் (காகாசுரன் என்னும் காகம்) அடையும்படி அருளிய ரீராமர்-மாயவன், அரி (திருமாலின்) அழகிய மருகனே! அல்லது அரி, இலக்குமி இவர் தம் மருகனே! காலன் என்னை அணுகாத வகைக்கு உன்னுடைய இரண்டு திருவடிகளில் வழிபடும் (புத்தியை) அருள்வாயே ஆதிப் பிரமனோடு தேவர் தேவலோகத்தை ஆளும்படி அவர்களிருந்த சிறையினின்றும் அவர்களை மீட்டு ஆடு மயிலினில் ஏறி, அமரர்கள் சூழ்ந்து வர வந்த இளையவனே! மாமரங்கள் அதிகமாக வளர்ந்துள்ள சோலைகள் பொருந்தி யுள்ள சுவாமிமலையில் உறைபவனே! சூரன் உடல் துணிபட கடல் வற்றிப்போக வேலாயுதத்தைப் பிரயோகிக்க வல்ல பெருமாளே! (காலன் எனை அணுகாமல். உனதிரு காலில் வழிபட அருள்வாயே) 226 மீன் கொடியை உடையவனும், உருவில்லாதவனுமான மன்மதன் கையிலெடுத்து, இனிமை தரும் (கரும்பு) வில்லில் நாண் இட்டு, நல்ல நெறியில் இருப்பவர்களும் - மயங்கித் திகைக்கும்படியாக வளைத்த வில்லின் உள்ளே ஒளித்த வலிய அம்பு போன்ற (மன்மதனது அம்பு போன்ற) கண்களை உடைய அழகிய மாதர்கள் - வணங்கிட வள்ளல் மகிழ்ந்தே வெய்யவன் கண் இரண்டொடு போகெனவிட்ட தெய்வ வெம்படை" கொடித் திரள் கண்கள் தமக்கே வந்தொர் நன் மணி நிற்கென வைத்ததும் . " வேகம் விண்டு சயந்தன் வணங்கி விசும்பிற் போக" - கம்பராமாயணம் சூளாமணிப் படலம் 77 - 82