பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1092

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமுதிர்சோலை) திருப்புகழ் உரை 619 440 கருவாய் அமைந்து தாயின் வயிற்றிலே உருவம் பெற்று, கால், கை, (என்னும் உறுப்புக்களுடன்) இனிய வாய், கண், மூக்கு உடல், காது (என்னும் உறுப்புக்களோடும்) மருத்து வச்சியின் கையில் விழும்படி வந்து படுக்கையில் தூங்கு என்று மிகவும் (சீராட்டிப்) படுக்கைமேல் தூங்கச்செய்த தான் கருவாய்க் கிடந்த தாயின் முலையில் நிறைந்துள்ள அமுதத்தினில் (பாலில்) பிரியனாகி - (வளர்ந்து) (தனக்கென அமைந்த) மனைவி, உண்டாயுள்ள சுற்றத்தார்களும், நல்வாழ்வும், நிலைத்து நிற்காத பொருளும், ஊரும் (இவை யாவும்) நிலையாம் என்று கருதி, உன்னை நினையாத சாமர்த்தியம் உடையவனாய், உன் திருவடி இரண்டையும் தொழ அறியாத முழு மூடனை உனது புகழை ஒதி, மெய்ஞ் ஞானம் பெறச் செய்யும் நாளும் ஒன்று உண்டோ! செருவாய் (போரிடையே) எதிராம் (எதிர்த் து வந்த) அசுரத்திரள் (அசுரர் கூட்டங்களின்) தலை, மூளை, கொழுப்பு, மாமிசம், இவைகளை (திமிர் - தாது - உள்ள) தேகக் கொழுப்பும் சத்த தாதுக்களும் உள்ள பூதக் கூட்டங்களுடன் வந்த பேய்கள் திகுதா (விரைவுடன்), உணவாக உண்டு, ரத்தத்தை நிரம்ப நரியுடன் குடிக்க, சில கோட்டான்களும் கூட நடித்திடக் கொன்ற வீரனே!