பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம்) திருப்புகழ் உரை 57 பிறைச் செக்கர்ப் புரைக்கு ஒத்து - செக்கர்ப் பிறைப்புரைக்கு ஒத்து - சிவந்த பிறைக்குத் தந்த உயர்வுக்குத் ஒத்து (அல்லது புரை செக்கர் பிறைக்கு ஒத்து பெருமையும் செந்நிறமும் கொண்ட பிறைக்குத் தலையிடம் தந்தது போலப். பின்னிய கூந்தலைக்கொண்ட பச்சைநிறக் கொடியாம் பார்வதிக்கு இச்சை ஆசை, பிறக்குற்ற பிறந்துள்ள (பிறப்பதற்குத் தக்க) அல்லது பிறங்குதல் உள்ள விளக்கம் உற்ற திருப்பக்கம் (அழகிய இடது) பாகத்தைத் தந்துள்ள சிவபிரானுடைய. பெருகு அப்பு-பெருகு நீராம் (கங்கையையும்), தடக்கை. பெருமைவாய்ந்த துதிக்கையையும் கொண்ட அல்லது பெருத்த * கப்புதலை - (வாரி உண்ணுதலைச் செய்யும், தடக்கையையும் கற்பகம் (விநாயகரது தொப்பை போலப் பருத்த) தொப்பை (வயிற்றை) உடைய கணத்துக்கு (பூத கணங்களுக்குப்) பிரசித்த நன்கு தெரிந்தவனே! கொடி (ஒழுங்கு அல்லது நீளமுள்ள) கோழிக் கொடியனே! (அல்லது கொடியாகக் கோழிக். கொடியை உடையவனே!) பறை வாத்தியங்களை முழக்கிக் (களைச்சு உற்ற) களைப்பு அடைந்துள்ள, குறள் செக்கட் கணத்திற்கு - செக்கண் குறள் கணத்துக்கு - சிவந்த கண்களை உடைய குறட் பூதக் கூட்டங்களுக்கு பலிக்கு உணவுக்கு வேண்டி, பச்சுடல் (அசுரர்களின்) பசிய உடல்களைக் குத்திப் பகிர்ந்தளித்த வேலனே!

  • அவல் பொரி கப்பிய கரிமுகன்' - விநாயகர் திருப்புகழ்1