பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணை! திருப்புகழ் உரை 161 கரும்பாலைகளின் சாறு கொதித்து வயலிடத்தே பாய்வதால் நெற்பயிர் தழைத்து சுவை தருவதான அமுதம் ஆகத் தேவர்கள் மெச்சின வயலூரில் வீற்றிருக்கின்ற வேலனே! சக்கரங்கள் கொண்ட தேர் வீதியில் பயிலும் (வரும்) ஆனைக்காவில், உண்மை விளங்கும் திரு நீறிட்டான் மதில் சுற்றிலும் உள்ள அழகிய திரு ஆனைக்காவில் (அப்பர்) சிவபிரான் பிரியப்படுகின்ற பெருமாளே! (துக்க வலைப்படல் ஒழிவேனோ) திருவருணை, 509. குமரனே! குருபரனே! (நற்) குணச் செல்வனே! அசுரர்கள் என்னும் இருளை (விலக்கும்) சூரியனே! சரவணபவனே! (இமய) மலையின் புத்திரிக்குப் புத்திரனே! (பகீரதி) கங்கைக்குப் பிள்ளையே! தேவர் தலைவனாம் இந்திரனுடைய சிறந்த (மானன்ன) மகள் (தேவசேனையும்). இம் மதில் கட்டப்பட்ட பொழுது சிவபெருமான் ஒரு சித்தராக எழுந்தருளி வேலைக்காரருக்குத் திரு நீற்றையே கூலியாகக் கொடுக்க, அது அந்த அந்த வேலைக்காரர் உண்மையாகப் பாடுபட்ட அளவுக்கு ஏற்பப் பொற்காசு ஆயிற்று. திருநீற்றையே கூலியாகக் கொடுத்த காரணத்தால் அங்கனம் கட்டப்பட்ட மதில் திரு நீறிட்டான் மதில் ஆயிற்று, அகில காரணர் வினைஞர்பால் பூதியை அளித்து முகில் சுலாவ் நன்கிழைத்த மாமதில்" இம் மதிலை வலம் வருவோர் சகல வரங்களையும் பெறுவர் "வரங்களை வேட்டோரெல்லாம் மெத்திய அன்பால் இந்த வியன்மதில் குழ்க...திரு ஆணைக்காப் புராணம் ஆரஞ்சாத்து படலம் 49; திரு நீற்றுத் திருமதிற் படலம் - 18. -