பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணை! திருப்புகழ் உரை 345 586. மேம்பட்டு (மணம்வீசும்) புனுகுசட்டம், பனி நீர்கள் ஆகிய இவைகளை (மல தோயால்) மலம் தோய்ந்துள்ள இந்த உடலின் மீது, (விடு) விட்டு (பூசி), மேருமலை போன்ற தீமைக்கு இடமான -கொங்கைப் பாரங்களின் மேலே புரள்கின்ற ஆபரணங்களின் ஒளியும், (பல) விதமான சிரிப்பும், மேகம், (அனு) பின்னும், காடு, கடல் இவைகளின் இருள் (கறுப்பு நிறத்தைக்) கொண்டு மணம் வீசும் மலர்களின் வாசனையைக் கொண்ட (மயிர்) கூந்தலும், நூல்போன்ற (நுண்ணிய) இடை துவள்வதும் (நெகிழ்வதும்) கொண்டு, வெட்கம் என்பதே இல்லாது அழியும் வேசையர்களுடன் உறவு ஆடி (நட்பு பூண்டு) త్థలో அவர்களுடன் ஆடுவதே கதியாகிச் சுழல்கின்ற மூடனாகய எனக்கு உனது ஞானமயமான சிவமயமான திருவடியைத் தந்தருளுவாயாக (உன்னைப்) போற்றும் அடியார்களின் வினை தூளாக அவர்களுக்கு அருமையான அழகிய மயிலான பதவியை அருள்பவனே! கூட அரனோடு நடமாடு (அரனோடு கூட நடமாடு) சிவபிரானுடன் நடமாடின அரிய காளி, அருள் மிக்க சிவகாமி, உமை, அருளிய குழந்தையே! ஆறுமுகம் கொண்ட குழந்தையே! (கங்கா) நதியின் குழந்தையே குறமாது (வள்ளியின்) கொங்கை குளிர விளையாடி மணம்செய்து கொண்டவனே! ஆதி ரகுராமராம் ஜயமாலுடைய மருகனே! பெரிய, ஆதித்தலமா ன அருணா புரியில் பெருமாளே! (ஞானசிவ மானபதம் அருள்வாயே)