பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/910

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயூரம்) திருப்புகழ் உரை 351 அழகான பொன்தட்டில் மொண்டு காம தாகத்துடன் வரும் மோகப்பசி யுள்ளவர்மேல் வைத்த அன்பினால் அவர்கள் உண்ணும்படி (அருள்பவர்) கொடுப்பவர்கள் போன்று, இளைப்புள காமிகளின் மோகமயல் நீங்க வாய்வெளுக்க, இடம்பரந்த நிலவொளி வீசும் முத்துமாலை அணிந்த பருத்து விளங்கும் அழகிய, மிக்கெழுந்த நிறைந்த கொங்கைப் பாரமாம். மலை இளகும்படி (கட்டி) அணைத்து வயிற்றின்மேல் விழுகின்று அவர்களின் மோகவலையிற் பட்டு அழிந்த பாவியாகிய நான் (உனது) ஒலிக்கும் கழல் அணிந்த திருவடியைப் பற்றிப் புகழ்ந்து நல்வாழ்வை அட்ைய அருள்புரிவாயாக. (வமிசம்) தன் குலத்தினர் பெருக, உலகம் எல்லாம் கலக்கம் உற, உக்கிரமான (கொடும்பையான) கொடுமையான இழிவான புத்தியைக் கொண்டு அழிவுதரும் செயல்களைச் செய்து துன்பம் விளைவித்த ராவணன் - பொருட்படுத்தாமல். குற்றமற்ற கற்பில் மேம்பட்ட சீதைக்குத் துக்கம் விளைவிக்க, குரங்குகளின் உதவியைக் கொண்டு அந்த ராவணனுடைய குலத்தை அறுத்து விளங்கும், திருமாலின் மருகனே! என்னுடைய மும்மலங்களையும் அறுத்துத் தொலைத்து, பாடுவாயாக என நீ எனக்குத் திருவருள் பாலிக்க, அதன்படி அடியேன் உன்னைப் புகழ்ந்து பாடின, உழுவலன்புடன் பாடின பாடல்களை மெச்சிப் பிரியப்பட்டு மேலான பேற்றினை எனக்கு அருளின முருகனே! அழகிய, சங்குதள் நிரம்பத் தவழ்ந்து உலாவுகின்ற (பொன்னி நதி) காவிரியின் தெற்குக் கரையில் விளங்குகின்ற தனக்கு ஒப்பு இல்லாத ரத்னமயமான மயிலாடுதுறையில் வீற்றிருக்கும் பெருமாளே! (வாழ்வுற அருள்வாயே)