பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணை! திருப்புகழ் உரை 227 முத்துமாலையும் தோடும் மிக அசைய (அல்லது முத்துமாலையொடு மிக அசையப்) பேசியும், நகைத்தும், (ஆசை) பொன், பொருட்டு - வேண்டி, யாரையும் வஞ்சனையுடன் மயக்குவிக்கும் காமிகள். (சோனைமழை) விடாமழைபோல் அடர்ந்த கூந்தற் பாரமும் கண்பார்வையும் கொண்டு கலாப மயில்போன்ற ஜாதியர் (கை) தம் இடத்தே உள்ள தூதாள்களை அனுப்பிப் பொருளைப் பறிக்கின்ற மாதர்கள் ஆகிய பொ துமகளிரின் வஞ்சகத்திற் பட்டு, ஏழ்நரகிற் சேருதற்கு உற்ற (என்னை), (அழற்காயனை) தீக்கு இரையாகும் உடலெடுத்த என்னை, (உட்சோதி ஒளி) - சோதி உள் ஒளி - ஜோதியுட் சோதியாய் விளங்கும் உனது திருவடியைத் தந்து அருள்புரிக. தானதனத்தி என முழங்கும் (திமிலை - பறைவகை, (பேரிகை) முரசு, இவை ஒலிசெய்ய, (சம் மலை சாய) . நன்றாகக் கிரவுஞ்சமலை (அல்லது எழுகிரி) அழியக் கடலில் நின்ற சூரனை வதைத்தவனே! தாளத்தின் இலக்கண விளக்கமானது ஒளிபொருந்திய தனது திருவடியின் மூலம் உண்டாகும்படி (ஒரு திருவடியைக் (கோலி) வளைத்து எடுத்தும், (ஒரு திருவடியைத்) (தாபரம்) பூமியில் வைத்தும் ஆடுகின்ற நடராஜப் பெருமானுக்கு ஒப்பற்ற பிள்ளையே! தேனின் ரசம்போல இனிக்கும், கொவ்வைப்பழம் போலச் சிவந்த வாயிதழைக்கொண்ட நாகணவாய்ப்புள் போன்ற குறப்பாவை (வள்ளியின்) கொங்கைக்கே மனம் உருகி அவளிடம் சேர்ந்த அழகிய ஒளி வேலனே! அழகிய அண்ணாமலைக் கோபுரத்தில் வீற்றிருந்து, உன் மனதுக்கு உகந்த தினைப்புன மயிலாம் (வள்ளிக்கும்), மெய்யன்பு கொண்டிருந்த தேவமகள் (தேவசேனைக்கும்) ஒப்பற்ற கருணையைக் காட்டிய பெருமாளே! (பாதமளித் தருள்வாயே)