பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1044

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பெருந்துறிை திருப்புகழ் உரை 485 உலகுக்கெல்லாம் குருவாய் விளங்கும் உனது தந்தைக்கு (உபதேசம்) அளிக்க குருவே! உன் தந்தையார் (சிவபிரான்) அடியர் கூட்டத்துக்கு - ஞானப் பிரசங்கம் செய்த இடமாகிய திருப்பெருந்துறையில் விரும்பி வீற்றிருக்கும் பெருமாளே! (இச் சடமாமோ) 848. (வரித்த) தொய்யில் எழுதப்பட்டதும் (அல்லது - சந்தனக்கலவை பூசப்பட்டதும்) குங்குமத்தை அணிந்ததுமான (முலைக் குரும்பையர்) குரும்பை முலையர் - தென்னங் குரும்பை யொத்த கொங்கையர் மனமகிழ்ச்சி கொள்ளுமாறு பல Ф) 16,75БИШПТGUT வளையல்கள் அணிந்துள்ள (தமது) கரங்களால் (ஆடவர்களை) வசீகரித்து இழுத்து, (இதம்பட உடல்) வந்தவர்கள் உடலில் இன்பம் ஊறுமாறு, காம மயக்கத்தை ஊட்டும் செய்கைகளால், (சாதாரணமா ப் அறிவு அழியாத கருத்தும் அழிவுபெற, இரண்டு கயல்மீன் போன்ற கண்களும் புரளச் சந்தோஷத்துடனே மகிழ்ச்சியைத் தருகின்ற இளவயதுள்ள மாதர்களால் (ஏற்படுகின்ற) (கரு) பிறவி என்கின்ற பெருங்கடலைத் தாண்டுதற்கு உன்னுடைய திருவடிகளை (அடியேனுக்குத்) தருதற்கு (உனது) திருவுள்ளம் இனியேனும் கூடுமோ! கிரவுஞ்சத்தின் உள்ளிடம் பொடிபடவும், அரக்கர்கள் தாமிருந்த ஊர்களுடன் புகை பரந்த எரியிற் பட்டழியவும் செலுத்தின வேலனே! (பக்கம் 484 தொடர்ச்சி.) 4 வரித்த-தொய்யில் எழுதப்பட்ட) - தொய்யில் மகளிர் தனங்க ளில் சந்தனக் குழம்பால் எழுதுங் கோலம் (பிங்கலம்). "வள்ளுகிர் வரித்த சாந்தின் வனமுலை'சிந்தாமணி 2532 "முலைமுதல் முற்றத்து வரித்த சாந்தின் வண்ணம்" பெருங்கதை 1-46-225. திருப்புகழ் பாடல் 665-பக்கம் 25 கீழ்க்குறிப்பையும் பார்க்க x " குரும்பை முலைமலர்க் குழலி" - சுந்தரர் 7-16-1.