பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1049

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

490 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை விலைக் கெனத்தன மாயிர மாயிர முலைக்க ளப்பினு மாசையொ தாதென வெறுப்பர் குத்திர காரியர் வேசையர் மயல்மேலாய்.

  • வெடுக் கெடுத்தும காபிணி மேலிட

முடக்கி வெட்கு மதாமத வீணனை மினற் பொலிப்பத மோடுற வேயருள் புரிவாயே அலைக் கடுத்த சுரார் பதி கோவென விடப் பணச்சிர மாயிர சேடனும் அதிர்த்தி டக்கதிர் வேல்விடு சேவக மயில்வீரா. f அடைக் கலப்பொரு ளாமென நாயெனை அழைத்து முத்திய தாமது பூதியெ னருட்டி ருப்புக ழோதுக வ்ேல்மயி லருள்வோனே,

  • இது அருணகிரியாரின் வரலாற்றைக் குறிப்பது. அவர் ஆதியில் நோயிற்பட்டதைக் குறிக்கும். "மாதர் இருவிழியாகும் அம்புக்கும் மதனவேள் வாளிக்கும் நடுவாகியே மாலாகும் அருணகிரி" என்றார் திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழில்.

f இதுவும் அருணகிரியாரின் வரலாற்றுப்பகுதி. இத்தலத்தில் முருகவேள் அருணகிரியாரது கனவில் தோன்றி அன்ப! நீ எனக்கு அடைக்கலப் பொருள் ஆவாய் அருணை யிலும் (திருப்புகழ் 563). எட்டிகுடிப் பதியிலும் (திருப்புகழ் 838), பொதிய மலையிலும் (திருப்புகழ் 413) நீ விரும்பிய வண்ணம் இதோ (உன் தோளில்) நமது வேற்பொறி, மயிற் பொறியை இட்டோம். முத்தி தரவல்ல நமது அநுபூதியையும் அருள்மயமாம் நமது திருப்புகழையும் ஒதும் பணியையே நீ பணியாகக் கொள்வாயாக" என அருளி மறைந்தார். அருணகிரியாரும் விழித்தெழுந்து தமது தோளில் வேல் அடையாளம் மயில் அடையாளம் இருக்கக் கண்டு மெய் சிலிர்த்து உள்ளங் குளிர்ந்து, "முருகா! நாயனைய என்னையும் பொருட்படுத்தி அழைத்து அடைக்கலப் பொருள்போல அருமை பாராட்டி வேற்பொறி மயிற்பொறி யிட்டனையே" என மகிழ்ந்து ......."இறைவா! நான் வேசையர் மயலே மேலதாய், மகா பிணி மேலிட முடங்கி வெட்கமடைந்த மஹா மதவீணன்: இனி, எனக்கு அவ்வுறவு நேராதிருக்க உன் திருவடியின் உறவே உறவாகும் பாக்கியம் வேண்டும்.....என வேண்டிப் பணிந்தனர்" -(அருணகிரிநாதர் வரலாறு பக்கம் 108-109) (தொடர்ச்சி 491 ஆம் பக்கம் பார்க்க)