பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவிநாசி திருப்புகழ் உரை 751 என்னுடைய அறிவில் உன்னை யுணர்ந்து, வருஷத்திற்கு ஒரு தினமாவது தவ ஒழுக்கத்தையும் ஜெப ஒழுக்கத்தையும் மேற்கொண்டு உள்ளங் கனிந்து உன்னுடைய திருவடியையும் (மனத்தே) தரிப்பதற்கு நீ அருள்புரிவாயாக. (சவத மொடும்) இதை அடக்குவேன்' என்னும் ப்ரதிக்ஞையொடு குதித்து ஆட்டின்மீது ஏறி அதை (ஊர்வாய்) செலுத்துவாய்; ஆறு சமயத்தவராலும் காணுதற்கு அரியவனே! சிவகுமரனே! அன்பு கொண்டு நெருங்கில், அங்ங்னம் நெருங்கினவரை விட்டுப் பிரியாதவனே! திருமுருகன் பூண்டி என்னுந் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே! (சரணமதும் பூண்டற் கருள்வாயே) அவிநாசி 947. இறவா வரந்தந்தும், பிறவா வரந்தந்தும்எனையாண்டருளும் குருவாகியும், வேறு துணையாகியும் (ஸ்திரமான) நிலையானஅழியாததான (அல்லது முத்தியாகிய) பெருவாழ்வை. மோகூடிவீட்டைத் தந்தருளுவாயாக, குறமாது (வள்ளியை)ச் சேர்பவனே! - குகனே! (எல்லாராலும்) புகழப்படுகின்ற குமரேசனே! அறம், பொருள், இன்பம் வீடு என்னும் நான்கு புருஷார்த்தங்களையும் உபதேசிப்பவனே - அவிநாசியில் வீற்றிருக்கும் பெருமாளே! (பெருவாழ்வைத் தருவாயே)