பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருவூர்) திருப்புகழ் உரை 717 933. மேகம் போன்ற கூந்தல் சரிய, (காதி லுள்ள) குழையொடு பகைத்து வருவன போன்ற கண்கள் (சிவவா) சிவக்க, மகிழ்ச்சியைக் காட்டும் புன்சிரிப்புடன் கூடிய முகத்திற் சிறு வியர்வை தோன்ற இன்ப நுகர்ச்சிக்கு இடமான கொங்கைகள் புளகம் கொள்ள, பேசும்பேச்சும் நிலைத் நில்லாத வழியில் எழ பதறுவது போல எழ ( த பங்கயமா) குவிந்த தாமரையாக - தாமரை போலக் கைகள் . அல்லது தாமரை போன்ற அழகிய கைகள் நெற்றியிற் சேரத் (துயர் ஒழுகும்) துன்பமே பெருகுவதும், (செல பாத்திரம்) நீரொடு கூடியதுமான (பாத்திரம்) கொள்கலமாம், இந்த உடல் மெலிந்து (உதராக்கினி மிகுந்து) வயிற்றில் எரி அதிகமாகித் துவண்டுபோகும் அளவுக்கு - துவட்சி - சோர்வு உறும் அளவுக்கு - (முயங்கி) தழுவிப் புணர்ந்து (விடாய்த்து) களைப்பு அடைந்து, (அவ்வாறு) மாதர்களின் தோள்களில் (துவயலி) துவையல் போல உழக்கப்பட்ட அரைபட்ட நான், (நின்தன) உன்னுடைய (வியாத்தமும்) எங்கும் நிறைந்துள்ள தன்மையையும் - கிர்த்தியையும், (வயலியல்) வயல்கள் பொருந்திய (வஞ்சியில்) மேல் - கருவூரில் (பயில்) பொருந்தி விளங்கும் உனது (சொரூபமும்) வடிவழகையும் (எனது) நெஞ்சில் இரவும் பகலும் மறக்க மாட்டேன்; எங்கும் நிறைந்த பொருளாம் பரமேசுரன் (மகபதி) இந்திரன் உய்யும் பொருட்டு நேர்ந்து அருளின (தோற்றுவித்த) சர்வ்ணபவனே (தீர்க்க) அறிவுத் த்ெளிவும் வசீகரமும் காட்டும் ஆறு திருமுகங்களைக் கொண்ட்வனாகி. (சருவு) போராடிய கிரவுஞ்ச (சிலோச்சயம்) மலையை ஊடுருவிச் செல்லும்படி எறிந்த திருக்கை வேல் கொண்டு, (சமர முகந்தனில் போர்க்களத்திலே (நாட்டிய மயில்) நடனம் செய்யும் மயிலில் ஏறினவனாய் எல்லாரும் பயப்படும்படியான ஆக்ரம = ஆக்ரமித்தலையும் (வலிய கவர்தலையும்), அல்லது அக்ரமத்தையும் அநீதத்தையும், (விகட்ம்) தொந்தரையையும், (பயங்கரம்) ஆச்சத்தையும் தந்த ராகூடித அசுரர்களின் அகங்காரம் அழிய (கெர்டியில் விளங்கின) கோழி கூவ.