பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்திப்பட்டு திருப்புகழ் உரை 623 நாரணி, (32) அறங்களைப் புரிந்த நாரி) தேவி ஆறு சமயங்களையும் காத்து வளர்ப்பவள். (பூதநாயகர்) த கணங்களுக்குத் தலைவரான சிவபிரானது இடது பாகத்தில் விரும்பி இருப்பவள், மகமாயி திருவிளையாடல்களை இயற்றுபவள் (நடனம் ஆடுபவள்), அழகிய நீலநிறம் உடையவள் வேதத் தலைவி, உமையம்மை, (நீலி) மூலாதாரத்தில் கரிய நிறத்தோடும் சாகினி' என்னும் திருநாமத்தோடும் உள்ளவள், முத்தலைச் சூலத்தைக் கொண்டவள், ரவிக்கையை அணிந்த கொங்கையை உடையவள், ஞானம் பூரணமாகக் கொண்டவள், கலைகளுக்குத் தலைவி. (நாகம்) மலை (மகளாம்) (வாணுதல்) ஒள்ளிய நெற்றியைக் கொண்ட தேவி பெற்ற வீர மயில்வாகனனே! மாடங்களும் (மெத்தைவீடுகளும்), மதில்களும், முத்து இழைத்த மேடான தளங்களும், கோபுரங்களும், நறுமணம் வீசும் சோலைகளும் கொண்டு அழகு வாய்ந்துள்ள குறட்டி என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே! (பாழுடலெடுத்து வீணில் உழல்வேனோ) அத்திப்பட்டு 899. (உடல்) வற்றித் திந்தது போலாகி, அறிவும் நீங்கி, உயிர் பிரிந்தவுடன், (உக்கிக் கிளைஞர்) கிளைஞர் - சுற்றத்தார் உக்கி உள்ளம் நைந்து கதறி அழ, (விரவு) வந்து சேர்ந்த பறைகள் யாவும் சப்திக்க, பொன் - மணி, (பொன் அழகு) துலங்கு பல்லக்கில் (உடல்) இடப்பட்டு (சுடுகாட்டில்) விறகுக் கட்டைகளின் மத்தியிலே போடப்பட்டு. (622ஆம் பக்கத் தொடர்ச்சி) f பூதி நாயகர்: o பூதகணங்களின் தலைவர் 'பூதபதயேநம" - சிவ அட்டோத்தரம். 'பொங்கழல் உருவன் பூதநாயகன்" - சம்பந்தர் 3-120-1. பூதநாயகர் புற்றிடங் கொண்டவர்" . பெரிய புரா திருக்கூட்ட1. # மகம் - ஆயி -யாக முதல்வி எனலுமாம்.