பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குற்றாலம் திருப்புகழ் உரை 831 சூரியனும் (தான் உதிப்பதெப்படி என்று) அஞ்சும்படியாகக் கடலில் நின்று கொண்டிருந்த சூரனை (அட்டுச்) செயித்த பெருமாளே! (இன்று வரவேணும்) திருக்குற்றாலம் 979. இதழ்களை உடைய கொத்தான மலர்களைக் கொண்ட நீண்ட கூந்தல் அசைந்தலைய, (நிலாவிய ஏதப்பொற்றோள் மிசை பட்டாடை மூடிய மாதர்) - விளங்குவதும், (காணும் ஆடவர்களுக்கு) ஏதம் - துன்பம் தருவதுமான அழகிய தோள்மேலே பட்டாடை மூடியுள்ள மாதர்கள், (கரமாதர்) (கரம்) விஷம் - பொருந்திய மாதர்கள் (அல்லது பட்டாடை பொருந்திய....தோள்மேல் மூடியுள்ள கைகளைக் கொண்ட கைகொண்டு தோள்களை மூடியுள்ள - மாதர்கள் - குற்றம் கண்டே பேசுகின்றவரும், பண ஆட்சியிலேயே நோக்கம் வைத்துள்ளவர்களும், (விசத்துக்கு ஆசை கொண்டு ஆடிகள்) - ஒரு மாகாணி அளவே (உண்மை) GAEF கொண்டவர்களாய் நடிப்பவர்களும். ஏறவிட்டபின் gಿಸಿ வீழ்த்தித் (தள்ளி) விடுபவர்களும், முழு (மாயர்) வஞ்சகர்களும் மாடுபோலக் கூடும் காமங் கொண்டவர்களும் (ஆகிய பொது மாதர்கள் வசம்)முழுகுதல் உற்றுமுழுகி அதனால் (காயமோடே) உடலிலே வந்த (வாயுப்புற் சூலை) புல் - இழிவான கெட்டதான வாயுசூலை - ஒருவகைச் சூலை நோய் - (வயிற்றுளைவு) நோயாதிகளான இவை அதிகப்பட்டு. (மாசு உற்று) கேடு அடைந்து (மாண்டு), பாசக் கயிற்றை விடாத யமனுடைய (ஊரை) லோகத்திற் புகுந்துப் பாழான இழிவான அல்லது கேட்டைத்தரும் நரகத்திலே விழும் (மாயத்தை) தீமையைச் (சி.வி) செ துக்கிக் கழித் து உன்னுடைய (.ஆதர வை) அன்பை உதவியைத் - தந்தருளுக.