பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1060

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிடைக்கழி திருப்புகழ் உரை 501 சிவமங்களம் பொருந்திய பரிசுத்த மூர்த்தியே! பரிசுத்தங்கொண்ட பெரியோர்கள் அருளிய முத்தமிழ்ப் பாக்களை அன்புடன் ஒதுகின்ற வளத்தை விரும்புகின்ற ங்கம் கொண்டவனே! மேம்பாடுடன் விளங்கும் மயில் வீரனே! (வரை) கயிலைமலையில் (வீற்றிருக்கும்) தவர்க்கு அரர் தவத்தினர்க்கும் இறைவனாம் பெரியோர், சூலத்தைத் திருக்கையிற் கொண்டவர், அதிக் குணத்து அரசர்-மேம்பட்ட் குணத்தை உடைய பெரியார், மிக்க தைரியமுள்ளவர்-ஆகிய சிவபிரானுடைய மனத்திலே பொருந்தி விளங்கும் ஞானதேசிக மூர்த்தியே கூரிய வேலனே! பலாப்பழங்கள் சாறாகி மேலிட்டுத் தழைத்த வயல்களின் இடங்களிலே பாய்கின்ற மருத்துவக்குடியில் வாழ்கின்ற செல்வமே தேவர்கள் பெருமாளே! (தாளினை அருள்வாயே) திருப்பந்தணைநல்லூர் 854. இன்பந்தருவதான சந்தனம், புனுகுசட்டம், இவை போன்ற சில வாசனைப் பொருள்கள் தக்கபடி வீச, அணைகின்ற கொங்கை மலைகள் இரண்டையும் கொண்டும், அழகிய (மெய், வாய், கண், மூக்கு, செவி) எனப்படும் இந்திரியங்கள் சோர்வு அடையவும், இருண்ட கூந்தல் மழை என்னும்படி நீண்டு விளங்கவும், நவரசங்களையும் கொண்ட (பேச்சுக்களாலும்) மோகத்தை ஊட்டும் குயில்போலப்பேசி. இடையானது கொடிபோல விளங்க, மன்மதன் இடும் விலங்கோ எனும்படியான கூந்தல்பாரம் என்ன, இலை) ஆலிலைபோன்ற வயிறு என்ன, சுழி-உந்திச்சுழி (கொப்பூழ்) என்ன, தொடை அரம்பை-அரம்பைத் தொடைவாழை போன்ற தொடை என்ன, அமுதந் தடமான-காம அமுதம் தங்கும் இடமான தன்மைகொண்ட அழகிய அல்குல் என்ன, இவைகளைக் கொண்டு, மன்மத லீலைக்கலை வித்தைப் பேச்சுக்களைப் பேசிக்கொண்டு, தெருவிலே.