பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1048

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்துருத்தி திருப்புகழ் உரை 489 மகர மீன்கள் உள்ள தெள்ளிய திரைகள் மோதும் ஒலிகடல் (வருணன்) கலக்கத்துடன் பயந்து (தனது) திருவடியில் தொழுது வணங்கும்படி ஒரு கூர்மையான செவ்விய அம்பைச் செலுத்தினவனும், இருபது புயங்களைக் கொண்ட வீரன் (ராவணன்) இறக்கும்படி (அங்கு) இலங்கைக்குப் போய் அவனுடைய ஒரு பத்து தலைகளும் அழிபட முன்பு நெருங்கின போரைச் செய்து (அமர்நிழல் - நிழல் அமர்) ஒளி பொருந்திய மதில் சூழ்ந்த இலங்கை நகர் பொடிபட அருளினவனுமான திருமாலின் மருகனே! நிகர்இல் ஒப்பிலாத சிறந்த அன்டங்களிலும் எட்டுத் திசைகளிலும் உள்ளவர்கள் மகிழ்ச்சிகொள்ள, சாமர்த்தி. யத்துடன், ஏறி நின்று அழகு பொருந்திய மயிலை மனோவேகத்தினும் அதிவேகமாகச் செலுத்தி (அம்புவிதனை) (அழகிய) பூலோகத்தை வலம்வந்த இளையோனே! நிலவொளிபோல வெள்ளொளி வீசும் குளிர்ந்த முத்துக்களும் ಕಣ್ಣಿ ஒளிதரும் பவளமும் து இலங்கும் வயல்கள் அழகுதர, - 學 ந்தமரம் நிறைந்த (துறை) Ý.'ಘೀ'"ಕ್ಲೈವ್ಲಿ? பெருமாளே! (அருள் புரிவாயே) திருத்துருத்தி 850. மலைப்பாரம் போல மார்பில் இரண்டு கொங்கைகளும் பாரத்தைத் தருவதால், இடையானது நூலென்னும்படி வளைவுபெற, கருமை நிறைந்த கூந்தல்ானது தோள்மேல்ே அலை வீசுவதுபோலப் புரள மயிற் பறவையின் கூட்டத்தவர்கள் போலப் பெரிய (தமது) ஆடைகளை நெகிழ்த்துவித்து தளர்த்திவைத்து, இரண்டு நீண்ட கண்கள் என்னும் வேல்கொண்டு மயக்குவித்துத் (தம்மை) விரும்பி வந்தவர்மேல் (மறு) குற்றங்களை (பாடும்) கூறுவது போன்ற (அல்லது) (மறுபாடும்) மறுபடியும் (அல்லது)மாறுபாடுள்ள-பகைமை உள்ள) அந்தக் கண்களைச் செலுத்தி.