பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலூர்) திருப்புகழ் உரை 649 பேய்க்கூட்டங்கள் பக்கங்களிற் சேரும்படி வரவும், சண்டை செய்யவும், கலகம் செய்யும் (கணம்) பேய்களின் வரிசை சிரிக்கவும், மேம்பட்டு விளங்கவும், (இறந்துபட்ட) அசுரர்களின் (தசைவழி) மாமிசக் குவியல் கிடைத்தபோது அதை (உள்ளம் குளிர்ந்து) தின்று நிமிரவும், திமிர்வன (விறைப்பு) விடவும், (போர்ப்) புழுதிகளிற் குளித்து. சூரியன் மேற்குத் திசையிற் சேரவும். (மேற்குக் கடலில்) (புழுதிபோக) முழுகவும், தரும தேவதை மகிழ்ச்சியுறவும், புகழை எடுத்துக் கூறவும், எல்லா உலகங்களும் அரகரஅர என்று துதித்துப் போற்றவும், போர்க்கள வேள்வியில் போர்க்களச் சாலையில். பொட்டணிந்த நெற்றியைக் கொண்ட உமாதேவிக்குப் பணி செய்யும் (செயமகள்) துர்க்கை, சாத்திரப்படி (அல்லது தனது மான் வாகனத்தின்மீது) நடனமிட, (எரிவிரி முடியினர்) நெருப்புப்போலச் சிவந்ததும், விரித்துள்ளதுமfன தலைமயிர் முடியை உடைய (அசுரர்) கூட்டம் பலவற்றின் உயிர் (வாசம் செய்திருந்த) உடல்கள் குவடுகள் என) மலைபோற் குவிய (பிணக்குவியல் மலைபோலெழ), நடனம் வல்ல மயிலில் ஏறி. கொஞ்சம் நேரத்திலே வேலைச் செலுத்தின குருபரனே! ஞான மார்க்கத்தைக் கொண்டுள்ள ஆறுமுகனே! இறைவனே! திரிசிராப்பள்ளிக்குச் சமீபத்தில் உள்ள (பக்கத்தில் உள்ள) வயலூரில் இன்பமுடன் வீற்றிருக்கும் பெருமாளே! (உணர்வு கெடும்வகை.உருவிகள் உறவாமோ) 908. என் திறத்தால் நான் பிறப்பதற்கும், என் திறத்தால் நான் இறப்பதற்கும், என் திறத்தால் நான் துதிப்பதற்கும், என் கண் கொண்டு ஒருவரைப் பார்த்து நான் அழைப்பதற்கும், என் கால் கொண்டு நான் நடப்பதற்கும், என் திறம் கொண்டு நான் ஓரிடத்தில் இருப்பதற்கும், மாதர்கள், வீடுகள் (இவற்றை)