பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அஞ்சாத
அஞசல்காரன்!

கடிதங்களைக் கைகள் சுமந்து கொண்டிருந்தாலும்: கற்பனைக் கனவுகளை சுமந்து கொண்டு அவன் மனம் எப்பொழுதும் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். எதிரே யார் இருந்தாலும், அவன் இயம்பும் மொழிகள் ஒன்றைக் குறித்தே இருக்கும். ஒன்றையே குறிக்கும்.

‘எப்படியாவது ஒரு நாள் நான் ஒலிம்பிக் பந்தயத்தில் வெற்றி பெற்றே தீருவேன். உலகப் புகழ் அடைந்தே தீருவேன்' என்பதே அவனது பேச்சாக இருக்கும். அதுவே அவன் உயிர் மூச்சாகவும் இருந்தது.

அஞ்சல்காரனுகத் (Post-man) தனது தொழிலைச் செய்து கொண்டிருந்தாலும், அவனது ஆசை கொஞ்சமும் குறையவில்லை. கொழுந்துவிட்டு எரிந்து கொண்டு தான் இருந்தது. ஆசை வெட்கமறியுமா என்பார்களே, அந்த நிலையில்தான் அந்த அஞ்சல்காரன் நிலையும் இருந்தது. செயலும் இருந்தது.

முன்னே பின்னே ஓட்டப் பந்தயங்களில் ஓடியபழக்கமோ பயிற்சியோ அவனுக்கு கிடையாது. வாழ்க்கையில்