பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம்) திருப்புகழ் உரை 21 457. ரத்தக்கறை விளங்கும் உக்ரம் பொருந்திய வேற்படையை ஏந்தும் சரவண மூர்த்தி, மனத்தில் ஒளிந்து கொண்டிருக்கும் திருடன், வீரம்வாய்ந்த கோழிக்கொடி ஏந்திய கையன், ஒப்பற்ற வீரக் கழலை அணிந்துள்ள தாமரையன்ன திருவடியை உடையவன், பாம்பு மலையான் (திருச்செங்கோட்டு ᏞᏞX❍❍ யான்), பழநி அரசு, கச்சிவீரன், பின்னும் கங்கணம் (கைவளை) அணிந்த வஞ்சிக்கு (வஞ்சிக்கொடி போன்ற வள்ளிக்குத்) தலைவன் என்றெல்லாம் செந்தமிழ்ப்பாக்களைப் குறைவு பாடாத அன்பு பூண்டு குற்றங்களை விலக்க வல்ல பொறுமைக் குணம் சிறந்து மேம்பட அற்பமான புத்தியை ஒழித்து எனக்கு (இப்போது)உள்ள (தீய) குணங்கள் எல்லாம் கெட்டு, குணம் வேறு ஒன்று இல்லாததான குணத்தை (ஒரே நிலையான வேறு குணங்கள் கலக்காத சாத்விக குணம் ஒன்றையே, அடைந்து, எவ்விதமான பற்றுக்களையும் ஒழித்தும், கடவுட்குறி ஒன்றையே கருதும் பரிசுத்தமான பக்தர்கள் இருக்கும் பெருமை பொருந்தும் ஞானசாரிய நிலை (பதவி) எனக்குக் கை கூடுவதற்கு உனது திருவருள் சற்றேனும் கிடைக்காதோ! நிலவு, கரந்தை (திருநீற்றுப்பச்சைக் கொத்துகள்), பாம்பு, ஊமத்தம், கபால எலும்பு, அப்பு (கங்கை நீர்), கொக்கின் இறகு ருத்ராக்ஷ மாலை, பிரமன் அன்று எட்டுதற்கு அரிதாக இருந்த அழகிய கொன்றை இவையெலாம் அணிந்த FGՆՈԼ--