பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம்) திருப்புகழ் உரை 15 455. மாலையாக அழகிய வெட்சிப் பூங்கொத்துக்களைச் சூடிக் கொள்பவனும், குதிரையாம் மயிலை திக்குகளின் அந்தம் (கோடி வரையில் சுற்றும்படி நடத்துபவனும், சிறைவிடும் சொர்க்கத்துச் சுரரை).சொர்க்கத்துச் சுரரைச் சிறைவிடும். விண்ணுலகத்துத் தேவர்களைச் சிறையினின்று மீட்டவனும், கங்கையில் வாழ்ந்தவனும்-(ஆன). சிறுவன் குழந்தை) என்று இச்சைப்பட்டு - ஆசை நிரம்பிப் பஜிக்கும்படி பாடிப் போற்றும்படியான பெரிய பக்தியும், அழகிய கவிபாடும் திறமும் சிறிதேனும் இல்லாது, சித்தத்தில் (மனதில்) பரிசுத்த நிலை தோன்றாமல் - பரிகரம் (பரிவாரங்கள்) தம்மைச் சூழ்ந்திருக்கும் படியான பிரபுத்வம் (பெரிய பிரபு நிலையை) அடைந்து (செல்வ அதிகார நிலையைக் கூடி), பதறிப் (பரபரப்புடன்) அவ்விடத்தில் (அட்டப்பட்டனர்) பக்கத்தில் சூழ்பவர்களின் உண்மை நீதிகள் பலவற்றையும் கற்றுத் தர்க்கம்பேசி மதங் களின் வம்புப் பேச்சுக்களில் அழியாமல் - மேலான (வீட்டின்ப) நிலையை அடையப் பெற்ற எவரும் மிக்க மகிழ்ச்சியைக் கொள்ள பற்று அற்று நிற்கும் மேலான தவநிலையை அடையப் பெற்றிலேனே! அங்ங்னம் இருக்கின்ற எனது துயர் போமோ (போவதற்கு வழியுண்டோ)? ஒழுங்காகப் படப்பொறி வரிசையைத் தலையிற் கொண் டதும், செவ்விய படத்தைக் கொண்டதுமான பாம்பைக் கையிற் கட்டியுள்ள பெருமையோன், ஒப்பற்ற சிவன் ஆகிய பெருமானது பக்கத்தில் உள்ள அற்புதத் தலைவி, திருநீறு, முத்தலைச் சூலம் - (இவைகளைத்) தரித்துள்ளவள், கரும்புக்கு ஒப்பு என்று சொல்லத்தக்க சொற்களை உடைய சுந்தரி, தோன்றிக் கிளைத்த (பரவியுள்ள) கொங்கைகளை உடைய அந்தரி, சுரும்பு இக்கு வண்டுகள் மொய்க்கும் தேன் அனையாள் (அல்லது - மலையில் தோன்றிய கரும்பு) அல்லது வண்டுகள் மொய்க்கும் கரும்பு) ஏந்திய (பத்ரை) பத்ரை (காளி) யாரும் அறிய ஒண்ணாத