பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154சீவக சிந்தாமணி


மாதிரி, வேளை நாழிகை பார்ப்பது இல்லை; ஆரம்பத்தில் தன் மனைவியிடம் காட்டிய அன்பையும் ஆசையையும் விளக்குத் திரிபோல் எரிய விட்டுக் கொண்டிருந்தார்.

மற்றும் அடிக்கடி சுற்றத்தினர் தெரிந்தவர்கள் திருமண இதழ்களைக் கொண்டு வந்து நீட்டிக் கொண்டிருந்தனர். அப்பொழுது எல்லாம் அவள் அந்த வீட்டுப் பிரச்சனையாகி விட்டாள்.

“என்னங்க உங்க பெண்ணுக்கு?”

“இந்தக் கேள்விகள் துளைத்துக்கொண்டே இருந்தன. இவளும் இளைத்துக் கொண்டே வந்தாள். காதல் தோல்வியுற்றவர்கள் புகும் சரணாலயத்தில் இவளும் புகுந்து கொண்டாள்.

அவளுக்குத் தன்னைப் பற்றியே ஒரு அச்சம். மறுபடியும் இது போன்ற மனத்தாக்குதல் வருமோ என்று அஞ்சி வைத்தியரிடம் காட்டினார்கள்.

“இவள் ஏதோ ஒர் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறாள்; மறுபடியும் இந்த மாதிரி அதிர்ச்சி வராமல் கவனித்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டுப் போய் விட்டனர்.

மருத்துவ மனையில் நிரந்தரமாகத் தங்க முடியாது; அதற்காக அவள் நிரந்தரமாக அக்கன்னிமாடத்தில் வைக்கப்பட்டாள். பெற்றோர்களுக்கு ஏதோ ஒரு வகை மன நிம்மதி ஏற்பட்டது.

“வயது பெண் அது இஷ்டமாக விட்டு விடுவதுதான் நல்லது” என்று வந்த வரன்களை எல்லாம் தரமற்றவை என்று தள்ளிப்போட்டு வந்தனர்.

ஒட்டப் பந்தயத்தில் வெற்றி பெற்ற உஷாவாக இவள் பெயர் எடுத்தாள். வாழ்க்கையை விட்டு ஒடி எந்த ஆட