பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 57 (தலையிற் சூடியுள்ள) குமுத மலரின் நாயகனாம் திங்களின் (நிலவின்) பிளவு அமுதத்தை மிகச் சிந்தவும், திருவடிச் சிலம்பு வேத மொழிகளை மிகக் கொஞ்சி ஒலிக்கவும், வளைந்த சடைகள் (மண்டலமிட்டுச்)சுழன்று தொங்க வும், பக்கத்திலுள்ள கொடி (போன்ற பார்வதிதேவி) ஆடவும், சிறந்த (கங்கை) ஆறு அசையவும், இசையொலி மிகப் பொங்கி எழவும், கழல்கள் அதிர்ந்தொலிக்கவும், டெகுடகுட டெங்கட் டெங்கத் தொகுதிதோ (என்னும்) பேரொலியுடன் முழவு வாத்தியம் முழங்கவும் செங் கையில் தமருகம்(உடுக்கை) அதிர்ந்தொலிக்கும் தாள ஒலி யுடன் அன்பர்களுக்கு இன்ப நிலையை உதவுகின்ற பரத (நடன) குருவாகிய சிவன் வணங்கும் சற்குரு நாதனே! திரண்டு மணியும் முத்தும் உயர்ந்துள்ள தென்னை மரங் களில் தங்கிப் புரளும்படி வீசுகின்ற அலைகளையும், மகர மீன்களையும், சங்கங்களையும், (உடைய) 3issu கருநிறக் கடல் அணைந்துள்ள திருச்செந்துாரிற் கந்தப் பெருமாளே! (நெஞ்சத்து அஞ்சிப் பகிரேனோ) i8 *** கொடிபோன்ற இடை துவள, அங்கங் கிளர்ச்சி கொள்ள அழகிய குமுதம் போன்ற அமுதளிக்கும் இதழைப் பருகி இன்பங்கொள்ளும் எண்ணத்தை உடையவன் நான்); (மாதரொடு) குலவி அணைந்து மேகம் போன்ற கூந்தல் சரிந்து அன்பினால் வரும் மனப்பான்மை பரவ வளைந்த விரல் நுனியால் (நகக் குறிகளால்) புண்படுகின்ற கவலை கொண்டவன் (நான்); கொஞ்சிப் பேசி அவர்களுடன் இனிய களிப்புக் கொண்டு உள்ளமும் குரலும் ஒடுங்கத் தன் வசமிழந்து முதிருங் குணத்தன் (நான்), மணம் விரிந்து பொருந்தும் பாய்மீது.