பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/690

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருத்தணிகை திருப்புகழ் உரை 217 சமணர்களின் உடல் நாசமாக அவர்களைக் கழுவில் அழுத்தி, விண்ணுலகத்து அமரர் போற்றி வளர்த்த மங்கை(தேவுசேனை) யுடனும் குறத்தி வள்ளியுடனும் அழகு வாய்ந்த திருத்தணி மலையில் நடனம் புரிந்தருளும் பெருமாளே! (திருப்புகழ் அருள எனக்கினி அருள்வாயே) 286 அவிழ்ந்து மயிர் கலைபட, சங்கு போன்ற கழுத்தில் உள்ள மாலை கொங்கை மேற் புரள, குவிந்த கண்கள் கயல் மீன் போலச் சுழலப், பிறை நிலவு போல வளைவுள்ள நெற்றியை நெறித்து உருட்டி, சிரித்து, (கண்டவர் தம் மனத்தை) உருக்கி, மோகத்தை ஊட்டி (பற்ற வைத்து), இணையான குழைகள் செவிகளில் விளங்க, தேமல் கொண்ட கொங்கைப் பாரம்

  • திருத்தணிகையில் முருகவேளின் நடன தரிசனத்தை அருணகிரியார் கண்டு மகிழ்ந்தனர் போலும். திருப்புகழ் 308ஆம் பாடலிலும் "தணிகைமலை தனில் மயிலில் நிர்த்தத்தில் நிற்கவல பெருமாளே." என்றார்.

215 பக்கத் தொடர்ச்சி தீயிற் பட்டு மடிந்தனர். (இதன் விரிவை உபதேச காண்டத்திற் காண்க). சிரித்து எரித்த போது சிவபிரான் சிறிது விழித்துச் சிரித்தனர். "வாலிய புரத்திலவர் வேவ விழி செய்த... ஒருத்தர்" சம்பந்தர் - II 343. tஅயன்தலை அரிந்தது: - தானே பரம்பொருள் என்று கூறிச் சிவபிரானை இகழ்ந்த காரணத்தால் பிரமனுடைய ஐந்து தலைகளில் ஒன்று வைரவரால் அறுக்கப்பட்டது. வயிரப் புத்தேள் பழித்திடும் அஞ்சாம் சிரத்தினை உகிரினாற் கொய்தான்" (காஞ்சிப் புராணம் - வயிரவீச - 19) "இகழ்ந்த உனைச் சென்னித்தலை கொண்டது தேர்கிலையோ' -கந்தபுரா-காமதகன 28. 1.சிவனே பிரமனாய் உலகைப் படைத்தும், திருமாலாய் உலகைக் காத்தும், உருத்திரனாய் அழித்தும் விளையாடுபவர் - "உயிரவை .பவமலி தொழிலது நினைவொடு பதுமநன் மலரது மருவிய சிவன்" "உலகுகள் நில்ைபெறு வகை நினைவொடு மிகும். அரி உரு வியல் பரன்" உயிரவை அழிவகை நினைவொடு முதலுருவியல் பரன்"சம்பந்தர் -1- 21.1-3.