பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி) - திருப்புகழ் உரை 263 7 நுனிக் கூர்மை கொண்ட (வாயை உடைய) ஆண் முதலை வலித்துப் போரிட்ட யானைக்கு (கஜேந்திரனுக்கு) அருள் புரிதற்பொருட்டு ஒரு நொடிப் பொழுதில் அன்புடனே வந்த திருமாலின் மருகனே! அகார, உகார, மகாராதிகள் அடங்கிய முதலெழுத்தாம் (ஒம் என்னும்) பிரணவத்தின் பொருளைச் சிவபிரானுக்கு இனிமையாக உபதேசித்த குருநாதனே! தேவர்களுக்குத் தலைவனாம் இந்திரன் வணங்கிப் (பூசித்த) பழநித் திருவாவினன்குடியிற் குடியாக வீற்றிருந்தருளும் பெருமாளே! (தோகையம் பரிதனில் அற்புதமாக வந்தருள் புரிவாயே) 111 வஞ்சனை மிகுந்த மாய வம்பு செய்வோர், (தம்மிடம்) வந்தவர்களைத் துன்புறுத்துவோர், (உண்மைக்) காதல் இல்லாமல் அன்பு வார்த்தைகள் பலபேசிக் - கட்டிலில் அமர்ந்து கலவி வேடிக்கைகளைத் தந்த பொல்லார்கள், இதழ் ஊறலை உண்ணும் வேசையர், கண்டிப்புடன் பேசுகின்ற வார்த்தைகளால்; கவலையைத் தருகின்ற மோகத் துர்நடத்தையர், இனிமையான சொற்களை (வெளியிற்) பேசி, உள்ளத்தில் உருக்கம் இல்லாத வேசையர் (இத்தன்மையரது) இணக்கத்தையே விரும்பினவனாய் நான் மறவாமல் (எப்போதும்) அவர்களிடத்தேயே, உள்ளம் களிப்புக் கொண்டவனாய், அவர்கள் கொஞ்சியும், நடம் புரிந்தும் வேசை முண்டைகளாய்த் தந்த சுகத்தையே விரும்பி உடல் மெலிந் து போவேனோ!