பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/650

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . திருத்தணிகிை திருப்புகழ் உரை 177 கட்டுள்ள மொட்டுகள் வாய்விரிந் து ரசத் துளிகளைக் கொடுக்கும் சுனை (செங்கழுநீர்ச் சுனை) பிரபலமாயிருக்கும் திருத்தணிகையில், விளக்கம் பொருந்த அந்த ஸ்தலத்தில், பொருந்தி வீற்றிருக்கும் பெருமாளே! (காம விதத்திலும் உட்பட அலைவேனோ) 270 அரகர என்னும் அருமை மொழிக்கு உரியவராம் சிவனும், திருமாலும், பிரமனும் ஆக இம் மூவரும் போற்றி நின்று உனது முன்னிலையில் "ஆறுமுகனே! சரவணபவனே" என்று நாள்தோறும் துதிக்க, அசுரர்கள் அழியும்படி வேலாயுதத்தை அக்கினி கிளம்பினது போலச் செல்ல விட்ட மகாவீரனே! சிலம்பணிந்த தாமரையன்ன அடியிணைகளை அடியாருடைய உள்ளத்திற் பொருந்த அருளும் முருகேசனே! பகவதி, மலைமகள், உமை அருள வந்த குகனே! பரசிவனுடைய இரண்டு செவிகளும் மகிழ்ச்சி கொள்ள. (யாவராலும்) போற்றப்படும் ஒப்பற்ற மொழியாம் பிரணவத்தின் முடிவுப் பொருளை எடுத்துரைத்த குருபர மூர்த்தியே! சிறப்புப் பொருந்திய உலகத்தில் உள்ள கணக்கற்ற உயிர்களும், தேவர்களும் முணுமுணுக்கும்படி (நாம் முன்பு சென்று வழிபடுவதற்கு இல்லையே என்று மனம் சலித்து முணுமுணுக்கும்படி) முநிவர்களும்.