பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/691

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 முருகவேள் திருமுறை (5- ஆம் திருமுறை "பொலித்துமதத் தரித்தகரிக் குவட்டுமுலைப் பளப்பளெனப் புனைத்த்துகிற் பிடித்தஇடைப் பொதுமாதர். புயத்தில்வளைப் பிலுக்கில்நடைக் குலுக்கிலறப் பசப்பிமயற் புகட்டிதவத் தழிப்பவருக் குறவாமோ, tதலத்ததுவைக் குனித்தொருமுப் புரத்தைவிழக் கொளுத்தி மழுத் தரித்துபுலிக் கரித்துகிலைப் Sபரமாகத். தரித்துதவச் சுரர்க்கண்முதற் பிழைக்கமிடற் 'றடக்குவிடச் சடைக்கடவுட் சிறக்கபொருட் பகர்வோனே; "பொலித்து மதத் தரித்த பொலிந்து மதந் தரித்த t தலம் - பூமியின் நடுவில் உள்ள மேரு எனக் கொள்க. தலத்தது மேரு வில் மேருமலை . சத்த தீவுகளின் மத்திய பாகத்தில் உள்ளதும் கிரகங்கள் சுற்றி வருவதாகக் கருதப் படுவதுமான பொன் மலை. " மாநிலத் திடைநின் றோங்கிய நெடு நிலை மேரு' (சிலப்பதி - 28-48)

  • மழுதரித்தது, புலித்தோல் பூண்டது. முதலிய :

தாருக வனத்து முநிவர்கள், சிவனை வெறுத்து வேள்வி செய்தனர். சிவபிரான் பலியேற்க முநிவர்களின் இருக்கைக்குச் செல்ல, முநிவர்களின் பத்தினிகள் அவர் அழகைக் கண்டு மோகங் கொண்டனர். தங்கள் மங்கையரின் கற்பைக் குலைத்தார் சிவன் என்று முநிவர்கள் கோபித்து அவரைக் கொல்லக் கருதி ஒரு கொடிய வேள்வியை ஆற்றினர். ஆந்த வேள்வியில் எழுந்த புலியை அவர் மேல் ஏவினர் பரமன் அந்தப் புலியை அட்டு அதன் தோலை ஆடையாக உடுத்துக் கொண்டார். பின்பு அந்த வேள்வித் தீயினின்று எழுந்த மழு, மான், பாம்பு, பூதங்கள், வென்-லை. துடி, முயலகன், தி இவைகளை ஒன்றன் பின் ஒன்றாக அனுப்பச் சிவபிரான் மழுவையும், மானையும் கையிற் பற்றி ஏந்தினார். பாம்பை அணிந் தார்; பூதகணங்களைத் தமது சேனையாக ஆக்கிக் கொண்டார்; வெண்டலையையும், துடியையும், தீயையும் கையிற் பற்றினர் முயலகனைத் தன்னடிக்கிழ்த் தள்ளி மிதித்து நடனம் ஆடினர். அடுத்த பக்கம் பார்க்க