பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/520

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேரகம்) திருப்புகழ் உரை 47 தக்க சமயம் இது ஐயா! மிக்க பெருமையைத் தரும் நீடித்த சுகம், எல்லாவித செல்வம், அதிருஒ#ட்டம் றைந்த பெருவாழ்வு - நன்மதிப்பு, சிவஞானம், ழுத்தியாம் மேலான கதி, (இவை தமை) நீ கொடுத்து உதவி புரிய வேண்டுகின்றேன்! பளபளப்புள்ள (அல்லது நெய்பூசிய) கூரிய வேலனே! (உனது) சிவந்த பத்மதள பாதத்தை (தாமரை இதழ் போன்ற பாதத்தை)த் தினந்தோறும் துதிப்பதற்கு (அடியேனுக்கு) அருமையான தமிழ் (ஞானத்தைத்) தந்த மயில் வீரனே! அதிசயக் கோலங்கள் பலநிறைந்த பழநிமலை மீது விளங்கித் தோன்றும் அழகனே! திருவேரகத்து (சுவாமி மலை) முருகனே! (பரகதியும் நீ கொடுத்து உதவி புரியவேனும்)

  • 215

சுற்றப்பட்டுள்ள நரம்புகள், எலும்புகளைப் பொருத்தும் மாமிசம், குடல், நீர், கொழுப்பு, (மூக்குச்) சளி, இழுப்பு நோய், இரத்தம் சேரும் இடம் (இரத்தாசய்ம்), இந்திரியம், விளைகின்ற புழுக்கள் (கிருமிகள்), எலும்புகள், அழுக்குகள், மயிர், சங்குபோல வெளுத்த மூளை துக்கத்தை விளைவிக்கின்ற சேர்க்கை (நோய்), மாத விடாய் முதலிய மாசு, அவயவ நுனிகளில் விருத்தியாகும் குட்ட நோய், சிலந்தி (கிரந்திப்புண்), புற்றுவைத்தல், (புண் புரை வைத்தல்), சூதகவலி, (சதையைப்) புசிக்கின்ற (ராஜ) கட்டிப்புண், வயிறு வாயுவினால் உப்புகின்ற நோய், பித்தம், தூக்கம், மிகுந்துவர சரீரத்தினுள்ளே எத்தனை எண்ணங்கள், செய்கைகள், மயக்கங்கள், எத்தன்ை'வெறுப்பு, எத்தனை பொலிவு (மகிழ்ச்சி), (எத்தனை) வலிமைப்பெருமை, எத்தனை கூடிய நோய், மலம் அடைத் துள்ள குடிசை, பஞ்ச பூதத்தாலாய குடிசை எத்தனை குலுக்கு, மினுக்கு, மனக்கவலை, எத்தனை கபடம் (வஞ்சனை), நடவடிக்கை, உயிரின் சேர்க்கை, எத்தனை பிறப்பு இறப்பு - எடுத்து (நான்) உலகில் வாட்ட முற்று !ழிவேனோ | لائے