பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/687

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை குமரி கலித்துறை முழுகி மனத்துயர் கொடுமை யெனப்பிணி கலக மிடத்திரி குலைய னெணப்புலை கலிய னெனப்பலர் நகையாமல், மருவு புயத்திடை பணிக ளணப்பல கரியரி சுற்றிட கலைகள் தரித்தொரு மதன சரக்கென கனக பலக்குட னதுதேடேன்; வரிய பதத்தினி னருவி யிருப்பிடம் அமையு மெனக்கிட முனது பதச்சரண் மருவு திருப்புகழருள எனக்கினி யருள்வாயே: விருது தனத்தன தனன தனத்தன விதமி திமித்திமி திமித திமித்திமி விகிர்த டடுட்டுடு ரிரிரி யெனக்குகு வெகுதாளம் வெருவ முகிழ்த்திசை யுரகன் முடித்தலை நெறுநெ றெனத்திசை யதிர அடைத்திட மிகுதி கெடப்பொரு அசுரர் தெறித்திட விடும்வேலா, 'அரிய திரிப்புர மெரிய விழித்தவன் tஅயனை முடித்தலை யரியு மழுக்கையன் #அகில மனைத்தையு முயிரு மளித்தவ னருள்சேயே!

  • திரிபுரம் எரித்த வரலாறு. வித்யுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் என்னும் அசுரர் மூவர் தவஞ்செய்து, பொன், வெள்ளி, இரும்பு இவைகளால் ஆய மூன்று பட்டணங்கள் (புரங்கள்) ஆகாய வழியாகச் செல்லக் கூடியவைகளைப் பெற்றுப் பறந்து பல இடங்களையும் பாழாக்கி வந்தனர். அவர்கள் செய்யும் கொடுமையைப் பொறுக்க முடியாத தேவர்கள் சிவபிரானை வேண்டச் சிவபிரான், தேவர்களே தேராகவும், பிரமன் தேர்ச் சாரதியாகவும், நான்குமறைகளும் குதிரைகளாகவும், மேருமலை வில்லாகவும், வாசுகி (பாம்பு) நாணாகவும், சந்திர சூரியர் தேர்ச் சக்கரங்களாகவும், திருமால் அம்பாகவும், அக்கினி அம்பின் நுனியாகவும், வாயு அம்பின் சிறகாகவும் அமையப் போருக்கு எழுந்தனர். சிவபிரான் தேரின் மேல் மலரடியை வைத்தலும் தேர் புவியில் அழுந்தியது. அப்போது திருமால்

215ம் பக்கம் பார்க்க