பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368 முருகவேள் திருமுறை (3- திருமுறை அமர்பொரு காதுக் கோலை திருத்தித் திருநுதல் நீவிப் பாளித பொட்டிட் டகில்புழு காரச் சேறு தனத்திட் டலர்வேளின், சுரத விநோதப் பார்வைமையிட்டுத் தருணக லாரத் தோடைதரித்துத் தொழிலிடுதோளுக்கேறவரித்திட் டிளைஞோர்மார். துறவினர் சோரச் சோரந கைத்துப் பொருள்கவர் மாதர்க் காசையளித்தற் றுயரற வேபொற் பாதமெனக்குத் தருவாயே! கிரியலை வாரிச் சூரரிரத்தப் புணரியின் மூழ்கிக் கூளிகளிக்கக் கிரணவை வேல்புத் தேளிர்பிழைக்கத் தொடுவோனே. கெருவித கோலப் பாரத னத்தக் குறமகள் பாதச் சேகர சொர்க்கக் கிளிதெய்வ யானைக் கேபுய வெற்பைத் தருவோனே, பரிமள நீபத்தாரொடுவெட்சித் தொடைபுனை சேவற் கேதன துத்திப் பணியகல் பீடத் தோகைமயிற்பொற் பரியோனே. பனிமல ரோடைச் சேலுக ளித்துக் ககனமளாவிப் போய்வருவெற்றிப் :பழநியில் வாழ்பொற் கோமள சத்திப் பெருமாளே. (59) தோடை - தொடை மாலை. 1 முநிவோரும் மாலாகி வாட நகைத்து (362) நீத்து இலங்கு வரரும் திகைத்திரங்க (607) முநிவரும் மனவலி கரையும் (921) 曙 துறந்தோர் உளத்தைப். பதைக்கப் பதைக்க வதைக்கும் கண்ணார்' -கந் - அலங்-32.

  1. இந்தத் திருப்புகழ்ப் பாடலில் வேல், மயில், சேவல், தேவ சேனை, வள்ளி யம்மை, கடம்பு, வெட்சி, திருவடி யாவும் வருகின்றன.