பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேரகம்) திருப்புகழ் உரை 3 195 குமரனே! குருபரனே! முருகனே! குகனே! குறச்சிறுமி (வள்ளி) கணவனே! சரவணனே அசுரர்களைக் கலக்கியவனே! பிறையைச் சடையிற் சூடியுள்ள சிவனாரின் குருபோல அமைந்து சிறந்த உபதேச மொழியைப் போதித்த மயிலனே (அல்லது வேலனே)! எனக் கூறி நாள்தோறும் உருகாமல் குயில்போலும் பேச்சுக்களை உடைய நல்ல மகளிர் கண்பார்வையால் உருக்குபவர், தெருவில் எப்போதும் அன்னம் போல நடப்பவர், தம்மைப் பார்த்து மகிழ்பவர்களுடைய பொருளையும் மனத்தையும் உடனே பறிப்பவர், எவரும் தமது வசத்தில் அகப்படும்படி வசீகரணம் செய்யும் முகத்தை மினுக்குபவர், கொங்கை மீதுள்ள புடைவை சரிய நடுத் தெருவில் நிற்பவர், பொருள் இல்லாது தம்மிடம் வருபவர்களுடைய மனம் முறியும்படி நழுவியும் மழுப்பியும் கண்வலையால் (அவர்களுக்கு) வஞ்சனை செய்தும், அவரவர் (கொடுத்த பொருளுக்குத் தக்கபடி) மகிழ்ச்சியுற படுக்கையில் உருக்குபவர் (ஆகிய பொது மகளிரின்) வசத்தே ஒழுகி, அவர்களுக்கு அடிமையாகி (அம்மகளிர்) இட்ட வேலைகளில் திரிந்தலையும் மூடனுக்கு உனது திருவடியையே போற்றும்படியான திருவருளைத் தந்தருளுவாயாக, போர் செயக்கருதி அசுரர்களுடைய பவிெட போர்க்களத்தில் எதிர்த்த பொழுது, ஒரு நொடிப் பொழுதில் அந்த அசுரர்களுடைய படைகள் அழிய வேலைச் செலுத்திப், பூமியில் அசுரர்களுடைய தலைகள் உருளும்படி - போரில் தூள்படுத்திவிட்ட போர்க் களத்தில். தாகத்தோடு பேய்கள் நடனம் செய்ய, வீர பத்திரர்கள் கர்ச்சனை செய்ய, மாமிசத்தை உண்டும் ரத்தத்தைக் குடித்தும் காளி கொக்கரிக்க, சதை உணவில் மகிழ்ச்சி கொள்ளும்படி பேயின் வரிசைக் கூட்டங்கள் பல கோடிக் கணக்காகப்