பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி1 திருப்புகழ் உரை 331 142 பெண்ணின் உடலம் காய நின்ற ரத்தத்திலே உருண்டு. (அவள்) வயிற்றில் நெடுநாள் அலைப்ட்டுப் (பின்ன்ர்) பூமியில் - மனித உருவுடன் வந்து நாளுக்கு நாள் வளர்ந்து வயது பதினாறு முடிந்து அழகனாகி பொன்னிறத்த கொங்கைகளை உடைய (பொது) மகளிரின் வலையில் மிகவும் அலைப்புண்டு, அன்புடனே (அவர்களை) அணைந்து (அவர் பொருட்டுப்) பொருள் தேடிப்பெரும் பொருள் எல்லாவற்றையும் இழந்து காம மயக்கில் கவும் அலைந்த குற்றமுள்ளவனாம் என்னை ஆள உனது திருவருளைத் தந்தருளுக. தினைப்புனத்தில் வாழ்கின்ற மங்கை, ரகுநாதர் (திருமால்) தந்த புதல்வி - வள்ளி - இதழ் ஊறலை உண்ட அறிஞனே (அல்லது தேவனே)! (புட்ப பானத்தோடு) போர் செய்த காமனைச் சாம்பராகச் செய்த அருமை வாய்ந்த சிவனார் மகிழ்ந்த புதுமயில் ஏறும் கந்தனே! வடிவேலனே! பாம்பணி பூண்ட சிறந்த பார்வதி (மதங்க முநிவரின் புதல்வி - மாதங்கி) குமரி, மிக்க நீலி, சண்டி (துர்க்கை), பரம கல்யாணி தந்த பெருவாழ்வே! பகையாய் நின்ற அசுரர்களின் சேனைகளை மடிவித்து, தேவர்கள் சிறையினின்றும் மீளும்படி வென்று பழநிமலை மீதில் வந்து நின்ற பெருமாளே! (எனை ஆள உன்றன் அருள்தாராய்) 143 வாசனையுள்ள தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமன் அனுப்ப, செய்த வினையின் பயனை அனுபவிக்க முடிவான (பத்தாவது) மாதத்திற் பிறந்து (அல்லது மாலை மதிபோன்ற வடிவுடன் பிறந்து) முன்செய்த கொடுவினைகளால் -