பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1080

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமுதிர்சோலை) திருப்புகழ் உரை 6O7 436 நல்லொழுக்க முள்ள தாய், தந்தை, மனைவி, வீடு, (அல்லது மனையான மாது - மனைவி), மக்கள், சேர்ந்துள்ள பொருள் இவைகளில் ஆசை கொண்டு, மனது தடுமாற்றம் அடைந்து கெடுதலைத் தருவதான மாயையால் இவ்வாழ்வே நிலையான தாம் என்று எண்ணி, தேடிச் சேகரித்த பொருள் எல்லாம் தொலைந்து போகவேண்டி, தெருவில். பாலிய வயதினராய்க், கொங்கை மேருமலை போலவும், நெற்றி பிறைச் சந்திரன் போலவும் கொண்டுள்ள மாதர்கள் மீதுள்ள காம மயக்கால் என் சிந்தை மெலிந் து போகாமல் - (நீ) அழியா வாழ்க்கையைக் கொண்ட மயில் மீது வந்து, உனது பதங்கள் இரண்டையும் விரும்புகின்ற (விரும்பிப் போற்றும்) என்னுடைய மாய வினை அழிய (உனது) அன்பைப் பாலித்தருளுக; சேல்மீன் நிறைந்த (நீர்) வளப்ப நாடு, அன்னங்கள் நிரம்பிய வயல்கள் சூழ்ந்துள்ள மதில்கள் ஆகாயத்தில் உள்ள நிலவைத் தாவ (எட்ட) செம்பொன் மணி மேடைகள் கூடினவாய்த் தேவேந்திரர் தம் ஊர் இது என்று சொல்லும்படி விளங்கும் தத்தம் ஊர் வாழ்வில் மகிழ்ச்சி கொண்ட, தைரியம் மிகுந்த, சூரனை வென்ற திறல்வீரனே: ஆலவிடம் பொருந்திய கண்டத்தை உடையவர், அழகுடன் பெரிய சபையில் கூத்தாடும் ஈசர், தந்தையார் ஆகிய சிவபிரான் மகிழ்ச்சி மிகக் கொள்ள அவருக்கு வேண்டிய உபதேச மொழியை உபதேசித்து சோலைமலையில் வீற்றிருக்கும் கந்தனே! ஆதிமுதல்வனாய் விளங்கும் பெருமாளே! (மாயவினை திர அன்பு தருவாயே)