பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1082

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமுதிர்சோலை) திருப்புகழ் உரை 609 437 வீரம் வாய்ந்த மன்மதனது நூலில் (காம சாத்திரத்தில்) சொல்லப்பட்ட போகத்தைத் தருகின்ற மடமாதர் தங்கள் (பொதுமகளிருடைய) வேல் போலும் கண்ணால் மயக்கம் அடைந்து, இப்பூமியின்மேல் கைவீசி இதமான (இன்பகரமான) பேச்சுக்களைப் பேசும், அப்பொதுமகளிர் வாயினின்றும் பிறக்கும் இன்பச். சொற்களுக்கு இணங்கி (அவர்களிட்ட) வேலைகளைச் செய்து அவர்மேல் மோகம் மிகுந்து உற்சாகம் பூண்டு, கனத்த தன்மை கொண்டு அங்கு மிக்கிருந்த பொருள் (யாவும்) செலவழிந்த பின்னர் நான் பாதகனாய் நின்று 95 GTLDGU), பரிபக்குவ நிலை வருவதற்குக் கூடிய அன்பினால் கடப்பமலர் சூடியுள்ளதும் தண்டையணிந்ததுமான (உன்) பாத மலரை விரும்பித் தேடி நான் என்று பணிவேனோ! என்றும் தேயாது வளராது ஒரு தன்மையாயிருக்கும் சந்திரனைச் சூடியுள்ள சிவபிரானது இடது பாகத்தைக் கொண்ட (நாகணவாய்ப் புள் போன்ற) பார்வதியின் திருவருட் சத்தியால் வளர்ந்த குழந்தையே! மண்ணுலகம் எல்லாம் அடங்கும்படி ஒரடியால் அளந்த காயாம்பூ வண்ணனாகிய திருமால் மகிழும் மருகனே! சூரர் கூட்டங்களை அழித்து அவர்தம் கனத்தமுடிகளை அரிந்து அவர்கள் பொடிபட்டுச் சாம்பலாகக் கண்ட கூரிய வேலனே! சோலையிலே பறந்து உலவுகின்ற மயிலில் ஏறி வந்து சோலை மலைமேல் வீற்றிருக்கும் பெருமாளே! (பாதமலர் நாடியென்று பணிவேனோ)