பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை வால குமர குக கந்த குன்றெறி வேல மயில எனவந்து கும்பிடு வான விபுதர் பதியிந்த்ரன் வெந்துயர் களைவோனே. வாச களப வரதுங்க மங்கல வீர கடக புயசிங்க சுந்தர வாகை புனையும் ரனரங்க புங்கவ வயலூரா; ஞால முதல்வி யிமயம் பயந்தமின் நீலி கவுரி பரைமங்கை குண்டலி நாளு மினிய கணியெங்க ளம்பிகை த்ரிபுராயி. t நாத வடிவி #யகிலம் பரந்தவ ளாலி னுதர முளபைங் கரும்புxவெ னாவ லரசு மனைவஞ்சி தந்தருள் பெருமாளே (7) 502. அருள் பெற தனதனதன தானத் தானன தனதனதன தானத் தாணன தனதனதன தானத் தானன தனதான கருமுகில்திர ளாகக் கூடிய இருளெனமரு ளேறித் தேறிய கடிகமழள காயக் காரிகள் புவிமீதே.

  • கணி - பழம் - கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியை" திருவிசைப்பா, கனி - க(ன்) ணி இமயககன்னி பூசனை செய்த கேதாரம்". கந்தபுராணம் I-23-3.

f "நாத முடிவிலே நல்லாள் இருப்பது திருமந்திரம் 609

  1. அகிலம் பரந்தவள் - அகிலாண்ட நாயகி. திரு ஆனைக்கா

தேவி பெயர். Xவெண்ணாவல்அரசு திரு ஆணைக்கா அரன். நாவல் மரம் நிறைந்த வனத்திற் சம்பு முநிவர் தவம் செய்து கொண்டிருந்தார். அவர் எதிரில் வெண்ணாவற் பழம்" ஒன்று வீழ்ந்தது. அந்தப் பழத்தின் அருமையைக் கண்டு அதைக் கயிலையில் அரனுக்கு அவர் நிவேதித்தார். இறைவன் உண்டு உமிழ்ந்த விதையை அம் முனிவர் எடுத்து விழுங்கினர். அது அவர் வயிற்றில் முளைத்து வாய்வழியாகத் தழைத்து மரமாக ஓங்கி வளர்ந்தது. இறைவன் ஆணைப்படி அவர் அந்த வெண்ணாவற் பழம் விழுந்த தலத்திடை வந்து தவநிலையாய் இருந்தார். அம் முநிவர் வேண்டிய