பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவனைக்கா) திருப்புகழ் உரை 135 ஏழிசைத் தமிழிற் பயன் உற்ற (ஏழிசைத் தமிழாம். தேவாரப் பாக்களின் பயனைக்கொண்ட) வெண்ணாவல் மரத்தின் கீழ் விளங்குகின்ற உத்தமனாம் சிவன்-முக்கண் கொண்ட நிருத்தன் (கூத்தன்-நடனன்) பெற்றருளிய பெருமாளே! (எனக்கு நின் அருள் தாராய்) 500. சொல்லப்படுகின்ற "காரிகை" என்னும் யாப்பிலக்கண நூலின் எனக்கே முதற்பேர் (நிபுணர் என்னும் முதற் பேர் எனக்கே); உனக்கோ (உன் பேரில்) மடல் கோவை என்னும் பிரபந்தவகை ஒன்று பாடுவதற்கு (உழப்பாது) (காலம் கடத்தாது.தாமதிக்காது-உடனே) யானையின் தந்தப்பிடி அமைந்த எழுத்தாணியைத் தேடி எடு: உனக்கு இப் பூமியில் ஒப்பானவர்களை கண்டதில்லை (நான்); (குரைக்கு ஆன) பெருமைக்கு உரிய - வித்தைவல்ல கவியரசர்களுக்கே குடிக்கான்) நீ ஒரு புகலிடமாக விளங்குகின்றாய்; (பண) முடிச்சோடு கொண்டுவா பொற்காசுகளை, சிறந்த ஆபரணங்களையும், ரத்னம் முதலியவற்றையும், உயர்ந்த அழகிய ஆடைகளையும் எடுத்துக் கொண்டுவா; என்றெல்லாம் சொல்லிப் புகழும் இடர்ப்பாட்டில் (துன்பங்களில்) வாட்டம் உறுவேனோ! "மடல் தான் கனவிற் கண்ட ஒரு மாதை அடைவேன், அடையத் தவறின் மடலேறுவேன் என ஒருவன் கூறும் வகையில் கலிவெண் பாவிற் பாடப்படும் பிரபந்த வகை.உதாரணம் வருண குலாதித்தன் மடல்: கோவை ஆகப் பொருள் நூல்வகை வழிபாடு தெய்வத்தையேனும், ஆதரித்தவர்களையேனும் பாட்டுடைத் தலைவர்களாக அமைத்துப் பாடப் பெறுவது உதாரணம் - திருச்சிற்றம்பலக் கோவையார், தஞ்சைவாணன் கோவை. 500ஆம் பாடலின் முதல் இரண்டு அடிகளால் காரிகை என்னும் யாப்பிலக்கண நூல் அருணகிரியார் காலத்தில் நன்கு பயிலப்பட்ட் து ஒன்பதும், எழுத்தானிக்குத் தந்தப் பிடி போட்டிருந்தார்கள் என்பதும் தெரிகின்றன.