பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை "நிஜனத்தார். சித்தத் துறைவோனே: திருத்தாள் முத்தர்க் கருள்வோனே. திருக்கா ளத்திப் பெருமாளே. (2) 589. கலங்காமதி பெற தந்தன தானத் தனந்த தானன தந்தன தானத் தனந்த தானன தந்தன தானத் தனந்த தானன தனதான பங்கய னார்பெற் றிடுஞ்ச ராசர அண்டம தாயுற் றிருந்த பார்மிசை # பஞ்சவர் கூடித் திரண்ட தோர்.நர உருவாயே பந்தம தாகப் பிணிந்த ஆசையில் இங்கித மாகத் திரிந்து மாதர்கள் பண்பொழி ஆதைக் கடந்தி டாதுழல் படிறாயே, சங்கட னாகித் தளர்ந்து நோய்வினை வந்துடல் முடக் கலங்கி டாமதி தந்தடி யேனைப் புரந்தி டாயுன தருளாலே. சங்கரர் வாமத் திருந்த நூபுர சுந்தரி யாதித் தருஞ்சு தாபத தண்டைய னேகுக் குடம்ப தாகையின் முருகோனே, திங்களு லாவப் xபணிந்த வேணியர் பொங்கர வாடப் புனைந்த மார்பினர் திண்சிலை சூலத் தழுந்து பாணியர் நெடிதாழ்வார் Hor "நினைப்பவர் மனத்துளான்" - சம்பந்தர் -1-76-7. 1 முத்தர் - பிரம வித்துக்கள், பிரம வரர், பிரம வரியர், பிரம வரிஷடர் என நால் வகையினராய் இம்மையிலேயே முத்த ராயினார் (1) பிரம வித்துக்கள்: பிரமஞானம் அடைந்தும் லோகோபகாரமாகத் தமக்கு முன் விதிக்கப்பட்ட விதிகளின்படி ஒழுகும் ஞானிகள். (2) பிரமவரர் - சமாதியில் நின்றும் தாமே உணர்பவராகிய ஞானிகள். (3) பிரம வரியர்: சமாதியினின்றும் பிறர்கலைக்க எழுகின்ற ஞானிகள். (4) பிரம வரிஷ்டர்: தாமேயாகவும், பிறர் கலைத்தாலும் சமாதியினின்றும் எழாத ஞானிகள். (தொடர்ச்சி பக்கம் 351 பக்கம்.)