பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவானைக்கா) திருப்புகழ் உரை 143 மிகுத்த விலைகொண்ட ஒலை (காதணியை) அணிந்துள்ள காதை உடையவர்கள், பூரண சந்திரன்(வதனம் நேர் அப் பாவைகள்) நேர்வதன. அப் பாவைகள் - போன்ற முகத்தை உடைய அந்த (பதுமை அனையார்) மாதர்கள், கள்ளத்தனத்துடன் கூடிய முழுமோசக்காரிகள் - ஆசையாலே மேலான மார்க்கத்தை அறியாத அந்தக் காமிகள், உயிரையே பலிகொள்கின்ற ஆசைக்காரிகள், அம்பையே கண்ணாகத் தேடிவைத்துள்ளவர்கள். முகம் கொண்டு பாசாங்கு செய்கின்ற வெளிவேஷக்காரிகள், பொருள்மேலேயே ஆசை. கொண்டுள்ளவர்கள் - ஆகிய பொதுமாதர்களின் (உருவிய). வடிவழகு கொண்டுள்ள கொங்கை பாரங்கள் என்னும் மலைகள் (நெஞ்சில்), தைக்க உள்ளம் அழிகின்ற எனக்கு ஒர் அருளைப் புரிந்திடுக. மரகத விதம் (பச்சை நிறம்) கொண்டவளும், முத்துக்கள் போன்ற பற்களை உடையவளுமான குறமகளின் (வள்ளியின்) அதிக பாரமுள்ள, ஆபரணம் அணிந்த கொங்கை பொருந்திய மணவாள கோலம் உடையவனே! வளைதரு பெருஞாலத்து ஆழ்கடல் - பெருஞாலத்து வளைதரு ஆழ்கடல் பெரியபூமியை வளைந்துள்ள ஆழமான கடல் முறையிட, நடுவாகப் பாய்ந்து, பெரிய மலை கிரெளஞ்சத்தைத் - தொளை செய்யும்படி வேலைச் செலுத்தி அனுப் § மகாதிரனே! பாம்பணையின்மேல் ஏறிச் சீராகக் கண்துயிலும் திருமால், சக்ராயுதத்தை ஏந்தியவன், திருவடியிணையின் முடிவைத் தேடிக் காணுதற்கும் அருமையான (கிடையாதிருந்த). அலைநீர்க் கங்கையைக் கொண்ட சடையினர், மெச்சுகின்ற ஆண்மையை உடைய ஒப்பற்ற மயில் என்னும் குதிரையைக் கொண்ட (அல்லது மயிலை இருப்பிடமாகக் கொண்ட) பாரக்ரம சாலியே அழகிய திருவானைக்காவில் வீற்றிருக்கும் பெருமாளே! (உளம் அழிவேனுக் கோரருள் புரிவாயே)