பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோtச்சுரம்) திருப்புகழ் உரை 557 இரவில் தூங்கினாலும், யாருடனாவது பேசிக்கொண்டு இருந்தாலும், உன்னுடைய இளமையையும் உன்னுடைய அழகு பூண்டுள்ள பன்னிரண்டு தோள் வரிசையையும், இரண்டு திருவடிகளையும், முகங்களையும், நான் ஒதும்படியான ஞானத்தை அருள்புரிவாயாக; சரியான தவநெறியிலிருந் து "நம நாராயணாய" என்று ஒரு பிள்ளை (பிரகலாதன்) சொன்னவுடனே ஆராய்ச்சி அறிவு இல்லாத கோபத்துடன் "உன் கடவுள் எதனில் உளன் சொல்லடா" என்று கேட்டு முடியுமுன்னே அங்கிருந்த துணில் வலிமையுடைய (நர) சிங்கத்தின் உருவமாய் (இரணியன்மேல்) மோதி அவனை விழச்செய்து, தனது விரல்களின் நகம் புதைய அவனுடைய மார்பைக் கீறிப் பிளந்து வெற்றி சூடினவனும், கருடனுக்குத் தலைவனும், நெடியவனும் (மாவலியின் பொருட்டு நீண்டவனும்) ஆன திருமாலும், பிரமனும், நான்கு வேதங்களும் மேன்மை பெற. ரேகைகள் உள்ள வண்டுகள் இசை எழுப்ப, அழகுள்ள தோகை வாய்ந்த இளமயில் நடுவில் நடனம் செய்ய, ஆகாசத்தையும் ஊடுருவிச் செல்லும் அளவுக்கு வளர்ந்துள்ள க்முகமரத்தின் விரிந்த குலைகள் பூணுதற்குரிய ஹாரம் போல - ஆபரணமாக விளங்க, மதில் சூழ்ந்துள்ளதும், மருதரசர் (மருதநிலத்து மன்னர்கள்) (படைவிடுதி) பாசறையிடத்துக்குத் தக்க தலம் என மிக விரும்பத்தக்கதுமான (சோtசர் கோயிலில்), இளமை வாய்ந்த இடபத்தின்மேல் ஏறிவரும் சோமீசர் என்னும் திருநாமமுடைய சிவபிரானது கோயிலில் - மகிழ்ச்சியுடன் வீற்றிருக்கும் முருகனே! விரும்பி நிற்கும் தேவர்கள் பெருமாளே! (ஒத ஞானமதை அருள்வாயே) கருத்தைப் புலப்படுத்தும் * † நன்னன் என்பான் அந்த ஸ்தலத்தைப் பாதுகாத்தற்குப் படைகளை அங்கை வைத்திருந்தான்" சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும் - பக்கம் 57, இந்த ஈற்றடியின் பொருள் பின்னும் ஆராயத் தக்கது.