பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலுர்) திருப்புகழ் உரை 639 கையிற் சூலாயுதம் கொண்டவனே! முன்பு (சலபதி) கடல் போல (ஆரவாரம்) பேரொலியும், கொடிய (சுராபானம்) கள் குடித்தலும் உடைய (சாமுண்டி) துர்க்கை, (பயிரவி) ஆட யானையாகிய (பரி) வாகனத்தின்மேல் ஏறுவானும் (இந்திரனும்) ஜெயஜெய சேனா பதியே என்று ஆரவாரிக்க போர்க்களத்தில் (நீ) புக்குப் பயந்திருந்த சூரன். (அழுகைக்) கூச்சலிடவும், நாயும், பேய்களும், பூதங்களும், கழுகுகளும், நரியும், காக்கையும் (அவனது) குடலைக் கிறித் தின்னவும், சண்டை செய்த பல தோள்களைக் கொண்டவனே! (அல்லது) பலமான - வன்மை கொண்ட தோளனே! மேற்குத் திசையிலிருந்தும் பெரிய கடல்போலப் பரவி வருகின்ற ஆறு-காவிரி (காவிரியாறு) சூழ்ந்துள்ள குளிர்ந்த வயலூரில் உள்ளம் நிறைந்து வீற்றிருக்கும் பெருமாளே! (உபதேசம் பெறவேணும்) 905. முத்துமாலை அணிந்துள்ள கொங்கையைக் காட்டி, (LDT功り மார்பினுடைய தன்மையைக் காட்டி, (மாரனிலை - மன்மதனுடைய கலை - கொக்கோக சாத்திரத்தில் உள்ள காம நிலைகளைக் காட்டி), ஆடை ஆபரணங்களைக் காட்டி காம இச்சையை ஊட்டும் விஷம் கொண்ட கண்களைக் காட்டி, (பண்) ஒசை கொண்ட சொற்களைக் காட்டி, அன்பினைக் காட்டி, யாரோடும் குளிர்ந்த சிரிப்பை (தயையைக் காட்டும் சிரிப்பைக்) காட்டி, பொழுதெலாம் (மிகை) திச் செயலைக் காட்டியே - செய்த வினைகளைப் பெருக்கி, (அல்லது அவர்) தொழிலுக்கு உரிய செயல்களைக் காட்டிச் சினேகம் செய்து (நட்பைக் காட்டி), தொடர்ச்சி:- X மிகை - திச்செயல். 'குற்றமே செயினும் குணமெனக் கொள்ளும் கொள்கையால் மிகை பல செய்தேன்" - சுந்தரர் 7-69-6.