பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாலிகொண்டபுரம்) திருப்புகழ் உரை 631 (விண்டுபோய்) பின்பு பிரிந்து (அழிந்துபோய்) உடலை விடுவதை (என்) மனது ஆய்ந்து அறியும்; (இங்ங்னம்) நிரம்ப நீ எனக்கு அளிக்கும் வடிவங்களில் பிறப்புக்களில். (நான்) வந்து நாயினுங் (கடையனாய்)க் கீழ்ப்பட்டவனாப் மனம் நொந்து ஞானநிலையை இந்த கூrணமே வந்து கொடு என்று உன்னிடம் முறையிடும்போது குழந்தைகள் (பெற்றோர்களிடம்) தாவி நின்று புகழ்ந்தால் தந்தையும் தாயும் (அம் மொழிகளைக் கேட்டு) மனம் உருகி வந்து அக் குழந்தைகளைத் தழுவிக் கொள்வதை உன் உள்ளம் சிந்தியாதோ - நீ (சற்று) நினைக்கக் கூடாதா - (நீ எனக்குத் தந்தைதாய் ஆயிற்றே - ст6йт முறையீட்டைக் கேட்டு என்னை ஆதரிக்கக் கூடாதா என்றபடி, (அல்லது, என் உள்ளம் சிந்தியாதோ - தழுவிக் கொள்வதை நினைத்துநீயும் அங்ங்ணம் என்னை ஆதரிப்பாய் என்னும் உண்மை என் சிந்தையிற் புலப்படாதோ) (அந்தகாரத்தில்) பேரிருளில் இடி இடிப்பதுபோல வாய்விட்டு வரும் - கூச்சலிட்டு வருகின்ற (அங்கி பார்வை) தீப்போன்ற கண்களை உடைய பறையர் இழிகுலத்தராம் அசுரர்கள் ஒடுங்கி மாண்டுபோக அழகிய திருக்கை வேலைச் செலுத்தி அருளி, இந்த்ர லோகத்தில் மகிழ்ச்சியுடன் தேவர்கள் குடியேற அருள் புரிந்த குமரனே! எனது ஆவிக்கு உதவி புரிந்தவரும், சந்திரனைச் சேர்த்து வைத்துள்ள சடையரும், எந்தையும் ஆன சிவபிரானும், அவரது (இடது) பாகத்து அமர்ந்துள்ள அந்தப் பார்வதி தேவியும் ஆக இருவரும் . எங்கும் நிறைந்து வீற்றிருக்கும் ஒப்பற்ற கந்தனுாரில் (சத்தி) தேவி புகழும் எந்தை சிவபிரான் பூசித்து மகிழ்ந்த தம்பிரானே! (ஞானப் பதவி வந்து தா) வாலி கொண்ட புரம் 902. ஈ, எறும்பு, நரி, (நாய்கணம்) நாய்க்கூட்டம் (அல்லது நாய், (கணம்) பேய், கழுகு, காகம் இவைகள் உண்ணும் (இந்த உடலை நான் சுமந்து, இது தக்கது என்று (நினைத்து) ஆணவ மொழிகளையே பேசி மதயானைபோல