பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxi களஞ்சியம்: பல பொருள்களையும் ஒரே இடத்தில் வாங்க அமுதசுரபி, இருப்பது போல், பல கலைகளைப் புற்றிய செய்திகளையும் ஒரே நூலில் தெரிவிக்கும் நோக்குடன் கலைக்களஞ்சியம்’ உருவாக்கம் பெற்றது. - அளவிறந்த பொருளைச் சேமித்து வைக்கும் இடத்திற்குக் களஞ்சியம் என்னும் பெயர் வழங்கப்பட்டது. ஏராளமான நெல்லைக் கொட்டி வைக்கும் இடம் நெற்களஞ்சியம் எனப் பட்டது. தமிழ் நாட்டின் நெற்களஞ்சியம் தஞ்சாவூர் மாவட்டம்'-என்று கூறும் வழக்காறு ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது. நெல் போன்ற பொருள்களைத் திரட்டிச் சேமித்து வைக்கும் இடம் களஞ்சியம் என்பது போலவே, பொதுவாகப் பல்வேறு செல்வங்களைத் திரட்டிச் சேமித்து வைத்திருக்கும் இடமும் களஞ்சியம் எனப்படும். இதைச் செல்வக் களஞ்சியம்' என்று சுப்பிரமணிய பாரதியார் குறிப்பிட்டுள்ளார். அவர் 'கண்ணம்மா என் குழந்தை' என்னும் தலைப்பின் தொடக் கத்தில் பாடியுள்ள - 'சின்னஞ் சிறு கிளியே-கண்ணம்மா செல்வக் களஞ்சியமே”(1) - என்னும் பாடல் பகுதி ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது. செல்வப் பொருள்களே யன்றி, அறிவு (கலை) தொடர் பானவையும் களஞ்சியம் எனக்கூறப்படும். வடலூர் இராமலிங்க வள்ளலார் தமது அருட்பாவில் கோளத்தி நீக்கும் குணத்தோர்க்கு அருள்செய்திருக் காளத்தி ஞானக் களஞ்சியமே” என இறைவனை ஞானக் களஞ்சியமாகப் புகழ்ந்து பாடியுள் ளார். நெல்களஞ்சியத்துக்கு அடுத்த படி செல்வக் களஞ்சியம்; இதற்கு அடுத்த படி ஞானக்களஞ்சியமாகும். எனவே, பல்

  • திருஅருட்பா - மூன்றாம் தொகுதி - விண்ணப்பக் கலி

வெண்பா - 255